மதராசப்பட்டினம் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். இவர் லண்டனைச் சேர்ந்தவர். அதன்பின்பு, தமிழில் தாண்டவம், ஐ, தங்கமகன், கெத்து, தெறி, தேவி, எந்திரன் 2, மிஷன் சாப்டர் 1 ஆகிய படங்களில் நடித்தார். தமிழில் ரஜினிகாந்த், விஜய், விக்ரம், ஆர்யா, அருண் விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 


பிறந்தமேனியாக பிறந்தநாள் கொண்டாட்டம்:


பின்னர், தனது காதலனைத் திருமணம் செய்துகொண்டு தற்போது லண்டனிலே வசித்து வருகிறார். எமி ஜாக்சனுக்கு கடந்த 31ம் தேதி 33வது பிறந்தநாள் ஆகும். இதையடுத்து, அவர் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 






தனது படுக்கையில் வெறும் போர்வையுடன் எமி ஜாக்சன் இருக்க  அருகில் அவரது மகன் சிறுவன் ஆண்ட்ரூஸ் இருக்கிறார். அப்போது, எமி ஜாக்சனின் கணவர் எட் வெஸ்ட்விக் எமி ஜாக்சனுக்காக பிறந்தநாள் கேக்கை கொண்டு வந்தார். அதில் ஏற்றப்பட்டிருந்த மெழுகுவர்த்தியை எமி ஜாக்சனும், அவரது மகன் ஆண்ட்ரூசும் இணைந்து ஊதி அணைத்தனர். கணவன் மற்றும் மகனுடன் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார் எமி ஜாக்சன்.


ரசிகர்கள் வாழ்த்து:


எமி ஜாக்சனுக்கு ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள எமி ஜாக்சன் என்னுடைய பாஸ்சுடன் மிகச்சரியான காலை என்று பகிர்ந்துள்ளார். அவருக்கு அவரது கணவரும், மகனும் இணைந்து ஹாப்பி பர்த்டே என்று வாழ்த்து கூறி அன்பு முத்தம் பகிர்கின்றனர். 


எமி ஜாக்சனுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கியுள்ளார். அவர் அதிகபட்சமாக ஏ.எல்.விஜய் இயக்கத்திலே நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும், இந்தியிலும் எமி ஜாக்சன் நடித்துள்ளார். விண்ணைத் தாண்டி வருவாயா இந்தி ரீமேக்கில் த்ரிஷா வேடத்தில் எமி ஜாக்சன் நடித்துள்ளார். மேலும், ராம் சரண், அக்ஷய்குமார், நவாசுதீன் சித்திக், கிச்சா சுதீப், சிவராஜ்குமார் ஆகியோருடனும் எமி ஜாக்சன் நடித்துள்ளார்.


அவர் படங்களில் நடிப்பதற்காக மட்டுமே அவ்வப்போது இந்தியா வந்து செல்கிறார். தனது குடும்பத்தினருடன் அவர் இங்கிலாந்திலே குடியேறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடைசியாக தமிழில் அவர் நடித்த மிஷன் சாப்டர் படமும் லண்டனில் நடப்பது போன்ற கதை என்பது குறிப்பிடத்தக்கது.