மயிலாடுதுறையில் காவலர்களின் உயிர் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு 60 குண்டுகள் முழங்க உயிர்நீத்த காவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


காவலர் வீரவணக்க நாள் 


பணி நேரத்தில் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இதன்படி இன்று தமிழகத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.இந்தியா- சீனா எல்லை பகுதியில் 1959-ம் ஆண்டு நடந்த மோதலில் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்ட 20 இந்திய காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். 


TN Rains - Weatherman Update : மக்களே! தீபாவளி வரை தொடருமா மழை? தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் அப்டேட்!




அக்டோபர் 21-ந் தேதி 


இந்த சம்பவத்தை நினைவுக்கூரும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி காவலர்கள் உயிர் நீத்தார் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று அக்டோபர் 21 ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பாக மயிலாடுதுறை காவல் ஆயுதப்படை மைதானத்தில் காவலர்கள் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 


Diwali Celebration: தெரிஞ்சுகோங்க! தீபாவளி ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படியா கொண்டாட்றாங்க?




ஆட்சியர் உள்ளிட்ட பலர் அஞ்சலி 


இதில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்டத்தில் உயிர்நீத்த காவலர்களுக்காக மலர் வளையம் வைத்து 60 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவலர்கள் மற்றும் உயிர்நீத்த காவலர் குடும்பத்தினர் கண்ணீர் மல்க மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


Renault Bigster: குடும்பமா பயணிக்க ரெனால்டின் புதிய ஆஃபர் - இந்தியா வருகிறது பிக்ஸ்டர் 7 சீட்டர் கார் மாடல்




2 நிமிடம் மெளன அஞ்சலி 


முன்னதாக உயிர் நீத்த காவலர்களுக்கு அணிவகுப்பு மரியாதையை ஆயுதப்படை காவலர்கள் செய்தனர். தொடர்ந்து உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர் இதில் ஏராளமான காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.