தனது இடத்தை அளவீடு செய்யாமல் அதிகாரிகள் அலைகழிப்பதாக கூறி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதியவர் ஒருவர் தரையில் உருண்டு புரண்டு முதியவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


மாற்றுத்திறனாளி முதியவர் அழகர்சாமி 


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த தொழுதாலங்குடி காமராஜர் காலணியை சேர்ந்தவர் 60 வயதான  மாற்றுத்திறனாளி முதியவர் அழகர்சாமி. இவருக்கு அரசால் வழங்கப்பட்ட பட்டா எண்.11 -ல் உள்ள இடத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டுமென்று குத்தாலம் தாலுக்கா அலுவலகத்தில் மனு செய்துள்ளார்.


பெண் டிஎஸ்பி தலை முடியை பிடித்து இழுத்து தாக்கிய கும்பல் - அருப்புக்கோட்டையில் நடந்தது என்ன?




பல முறை அளிக்கப்பட்ட மனு


அந்த மனுவை தொடர்ந்து அளவீடு செய்வதற்கு சர்வேயர் பிரிவில் இருந்து அலுவலர்கள் வந்துள்ளனர். அப்போது இவரது வீட்டிற்கு அருகே வசிக்கக்கூடிய சிலர் பிரச்னை செய்ததாக கூறப்படுகிறது. அதனை அடுத்து அளவீடு செய்ய வந்த சர்வெயர்கள் அளவீடு செய்யாமல் திரும்பி சென்றுள்ளனர். இது குறித்து அழகர்சாமி பலமுறை மனு அளித்தாகவும், அந்த மனுக்கள் மீது இதுநாள் வரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அழகர்சாமி வேதனை தெரிவித்துள்ளார். 


ரசிகர்கள் மனதை கவர்ந்த 'கிளியே'.. டோவினோ தாமஸ் நடித்த ARM படத்தின் முதல் பாடல் வெளியானது!




மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் 


இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அழகர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். வந்த அவர் திடீரென்று அலுவலகம் வளாகத்தில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தால் தரையில் உருண்டு புரண்டு தனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தன் இடத்தை அளவீடு செய்யவிடாமல் தடுப்பவர்களின் மீது நடவடிக்கை எடுத்து, அளவீடு செய்துதர வேண்டும் என்று கூறினார். 


Yuvraj Singh: தோனி குறித்து பேசிய யோக்ராஜ்.. தந்தைக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக சொல்லும் யுவராஜ்! ஏன்?




ஆட்சியர் உத்தரவு 


உடன் அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை மீட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க அழைத்து சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இது தொடர்பாக உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Prashanth about Vijay : தம்பி விஜய் எப்படிப்பட்டவர் தெரியுமா? 'தி கோட்' ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்டில் பிரஷாந்த் சொன்ன அந்த விஷயம்...