ரசிகர்கள் மனதை கவர்ந்த 'கிளியே'.. டோவினோ தாமஸ் நடித்த ARM படத்தின் முதல் பாடல் வெளியானது!

டொவினோ தாமஸ் நடிக்கும் ARM படத்தின் முதல் பாடல் வெளியானது. பாடலை கேட்டவுடனே ரசிகர்கள் மனதில் இடம் பெறும் வகையில் அமைந்துள்ளது.

Continues below advertisement

"மின்னல் முரளி" படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டொவினோ தாமஸ். தற்போது அடுத்ததாக "ARM" படத்தில் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார். இப்படம் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Continues below advertisement

ரசிகர்கள் வைப் செய்யும் 'கிளியே' பாடல்:

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தயாரிப்பாளர்கள் ப்ரோமோஷன் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இப்படத்தின் முதல் பாடல் மலையாளத்தில் "கிளியே", தெலுங்கில் "சிலகே", தமிழில் "கிளியே", கன்னடத்தில் "கினியே" மற்றும் இந்தியில் "து ஹை" என்ற பெயர்களில் வெளியாகியுள்ளது.

இந்த மெல்லிசை பாடல் ஒவ்வொரு மொழியிலும் அழகான வரிகளைக் கொண்டுள்ளது, அது ரசிகர்களின் மனதில் கேட்டவுடனே இடம் பிடித்துள்ளது. இப்படத்திற்கு திபு நைனன் தாமஸ் இசையமைத்துள்ளார். இந்த பாடலில் திருச்சூரில் இருந்து 30 பேர் கொண்ட செண்ட மேளம் மற்றும் புடாபெஸ்டில் இருந்து 40 பேர் கொண்ட இசைக்குழு இடம்பெற்றுள்ளனர். இந்த ட்யூன் பலரது இதயங்களையும் கவர்ந்துள்ளது.

தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் கபில் கபிலன் மற்றும் அனிலா ராஜீவ் ஆகியோர் பாடியுள்ளனர். மலையாளத்தில், மனு மஞ்சித் பாடல்களை எழுதி, கே எஸ் ஹரிசங்கர் மற்றும் அனிலா ராஜீவ் ஆகியோர் பாடியுள்ளனர்.

எதிர்பார்ப்பை எகிற வைத்த ARM திரைப்படம்:

இந்தியில், விக்ரம் எட்கே வரிகளை எழுத, அபய் ஜோத்புர்கர் மற்றும் அனிலா ராஜீவ் ஆகியோர் பாடியுள்ளனர். எல்லா மொழிகளிலும் பாடல் மாயாஜாலமாக உள்ளது. மேலும் அழகான காட்சிகள், டோவினோ தாமஸ் மற்றும் கிருத்தி ஷெட்டிக்கு இடையேயான கெமிஸ்ட்ரியுடன் அற்புதமாக தெரிகிறது.

ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த 3டி திரைப்படத்தை மேஜிக் பிரேம்ஸ் பேனரில் லிஸ்டின் ஸ்டீபன் மற்றும் யுஜிஎம் மூவிஸ் சார்பில் டாக்டர் ஜகாரியா தாமஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர். "கான்", "சித்தா" போன்ற படங்களுக்கு பெரும் வரவேற்பை பெற்ற திபு நைனன் தாமஸ் "ARM" படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஆகஸ்ட் 25 அன்று வெளியிடப்பட்ட "ARM" படத்தின் டிரெய்லர் சமூக ஊடகங்களில் வைரலாகி நான்கு நாட்களில் 5 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. இப்படத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்கள் மூலம் கவனம் பெற்ற கிருத்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும், பாசில் ஜோசப், ஜெகதீஷ், ஹரிஷ் உத்தமன், ஹரிஷ் பெராடி, கபீர் சிங், பிரமோத் ஷெட்டி மற்றும் ரோகினி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 

அறிமுக இயக்குனர் ஜித்தின் லால் இயக்கிய இந்த பான் இந்தியா ஃபேன்டஸி திரைப்படம் முழுக்க முழுக்க 3டியில் தயாரிக்கப்பட்டு மலையாள சினிமா வரலாற்றில் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, படம் குறிப்பிடத்தக்க சலசலப்பை உருவாக்கியுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola