என் தந்தைக்கு மனநலப் பிரச்சினை இருப்பதாக நான் உணர்கிறேன், அவர் அதை ஏற்க விரும்பவில்லை என்று தன்னுடைய தந்தை யோக்ராஜ் குறித்து யுவராஜ் சிங் பேசியுள்ளார்.


தோனியை சாடிய யோக்ராஜ் சிங்:


இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங். இவரது தந்தை யோக்ராஜ் சிங். இவர் தான் தற்போது தோனி மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறார். இது தொடர்பாக ஒரு பேட்டியில் பேசிய அவர்,"நான் தோனியை ஒருபோதும் மன்னிக்கமாட்டேன். தோனி அவரது முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும். மிகப்பெரிய கிரிக்கெட் வீரரான தோனி எனது மகனுக்கு எதிராக என்னவெல்லாம் செய்தார் என்பது இப்போதுதான் வெளிவருகிறது. அதை எப்போதும் நான் மன்னிக்கவே மாட்டேன்.


தோனி எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையையே அழித்துவிட்டார். இன்னும் 4-5 ஆண்டுகள் எனது மகன் விளையாடியிருக்க வேண்டும். எனது மகன் மாதிரி இன்னொருவர் பிறக்கவே முடியாது. கம்பீர், சேவாக் எல்லாம் இன்னொரு யுவராஜ் வரவே முடியாது என்று கூறியுள்ளனர். புற்றுநோயுடன் ஆடி இந்தியாவிற்காக உலகக்கோப்பையை வென்று தந்த யுவராஜ்சிங்கிற்கு இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.


என் வாழ்க்கையில் எப்போதும் இரண்டு விஷயங்களை செய்ய மாட்டேன். என்னை ஏமாற்றியவர்களை நான் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டேன். அவர்கள் எனது குடும்பமாக இருந்தாலும் சரி, குழந்தையாக இருந்தாலும் சரி"என்று கூறியிருந்தார். 


இச்சூழலில் தான் தோனியை இவ்வளவு மோசமாக பேசி இருக்கிறார். ஆனால் யுவராஜ் சிங் இதை என் இன்னும் கண்டிக்கவில்லை என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கான காரணம் வெளியாகி இருக்கிறது. அதாவது கடந்த சில ஆண்டுகளாகவே யுவாராஜ் சிங் மற்றும் அவரது தாயார் இருவரும் யோக்ராஜ் சிங்கை பிரிந்து தான் இருகிறார்களாம்.


என் தந்தைக்கு மனநல பிரச்சனை இருக்கிறது:


இதனால் தான் யோக்ராஜ் பற்றி அவர் எந்த கருத்தையும் கூறவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் தன்னுடைய தந்தை யோக்ராஜ் குறித்து கடந்த ஆண்டு நவம்பரில் ரன்வீர் அல்லாப்டியாவின் போட்காஸ்டில் யுவராஜ் சிங் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அதில், "என் தந்தைக்கு மனநலப் பிரச்சினை இருப்பதாக நான் உணர்கிறேன், அவர் அதை ஏற்க விரும்பவில்லை. இது அவர் பேச வேண்டிய ஒன்று, ஆனால் அவர் அதை ஏற்கவில்லை"என்று கூறியுள்ளார். 


மேலும் படிக்க: Paris Paralympics 2024: பாரீஸ் பாராலிம்பிக்.. பதக்க வாய்ப்பு உள்ளதா? இந்தியா விளையாடும் போட்டிகள் என்ன?


 


மேலும் படிக்க: Happy Birthday Mohammad Shami: இந்தியாவின் எல்லைச்சாமி.. முகமது ஷமியின் டாப் 5 பெர்பாமன்ஸ்