சீர்காழி அருகே முறையாக பராமரிப்பு பணி நடைபெறாததால் மின்கம்பி சிறுவன் மீது அருந்து விழுந்து படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குற்றச்சாட்டுக்கு ஆளாகும் மின்வாரியம்


மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்சாரம் வாரியம் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறது. தமிழகத்திலேயே அதிக அளவு மின்வெட்டு இந்த மாவட்டத்தில் தான் இருந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மாதந்தோறும் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாகவும். ஆனால் முறையாக அந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில்லை என்றும், அதற்கு மாறாக அன்றைய தினத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுக்கு ஆதரவாக மின்வாரிய அதிகாரிகள் செயல்பட்டு, விற்பனைக்காக தயாராகும் குடியிருப்பு நிலங்களுக்கு மின்கம்பம் நடுவது, போன்ற தனியார்களின் நிறுவனங்களிடம் கையூட்டு வெட்டிக் கொண்டு அவர்களின் பணிகளுக்கு முன்னுரிமை வழங்குவதாகவும் சமூக ஆர்வலர்கள் மின்வாரிய அலுவலர்கள் மீது குற்றச்சாட்டை பதிவு செய்கின்றனர்.


ENGvsSA: "பார்ட்மேன் தற்கொலை செய்து கொண்டார்" - தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளரை சாடிய முன்னாள் வீரர்




மின் பராமரிப்பு பணிகள் நடைபெறாத கிராமம் 


அதற்கு ஒர் எடுத்துக்காட்டு சம்பவம் தான் தற்போது சீர்காழி அருகே நடைபெற்று உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பெருமங்கலத்தில் சுமார் 1500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். போதிய மின்சாரவாரி பராமரிப்பு இல்லாததால் இக்கிராமத்தில் உள்ள மின் கம்பங்கள் பழுதடைந்து சாய்ந்து விழும் நிலையில்  இருந்து வருகிறது.  மேலும் இப்பகுதியில் அவ்வப்போது மின் கம்பிகள் அருந்து விழுவது வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


Kallakurichi Video: விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்த கந்தனின் கடைசி வீடியோ: பேச முடியாமல் தவிக்கும் அதிர்ச்சி காட்சி




5 வயது சிறுவன் மீது அறுந்து விழுந்த மின் கம்பி


இந்நிலையில் பெருமங்கலம் கன்னி கோயில்தெருவை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவரது மகன் 5 வயதான  அபினேஷ், இவர் பள்ளி செல்வதற்காக குளிப்பதற்கு வீட்டின் கொல்லைப்புறத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக செல்லும் மின் கம்பி அறுந்து அபினேஷ் மீது விழுந்துள்ளது. இதில் மின்சாரம் தாக்கி அபினேஷ் உயிருக்கு போராடியுள்ளார். அதனை கண்ட அருகில் இருந்தவர்கள், மின் கம்பியை அகற்றி அபினேஷை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளார்.


"மருந்து பெயரை மாற்றி சொல்கிறார் அமைச்சர்" கள்ளச்சாராய விவகாரத்தில் பாயிண்டை பிடித்த இபிஎஸ்!




இதுகுறித்து  மின்வாரிய அதிகாரிகள் மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மாதம் தோறும் மின் பராமரிப்பு பணி செய்வதாக கூறி ஒருநாள் முழுவதும் மின் நிறுத்தம் செய்கின்றனர். ஆனால் இதுநாள் வரை எங்கள் பகுதியில் அதுபோன்ற எந்த பணியும் நடைபெற்றது இல்லை. அந்த பணியினை முறையாக செய்திருந்தால் இதுபோன்ற அசம்பாவிதம் நடைபெற்றிருக்காது எனவும், இனியாவது இதுபோன்று நடைபெறாத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.