சீர்காழியில் தனது ரத்தத்தை கொண்டு 1330 முறை விரல்ரேகை பதித்து திருவள்ளுவரை அரவிந்த் என்ற இளைஞர் வரைந்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.


ஓவியர் அரவிந்த் 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டைநாதபுரத்தை சேர்ந்தவர் 26 வயதான இளைஞர் அரவிந்த்.  இவர் சிறு வயது முதலே ஓவியத்தின் மீது அதிக பற்று கொண்டவர். அதன் காரணமாக ஏராளமான ஓவியங்களை வரைந்து உள்ளார். குறிப்பாக சாக்பீஸில் நுண்சிற்பங்களே வடிவமைப்பதை கைதேர்ந்தவர் ஆவர். 


Lucky Bhaskar : தரத்தை மேம்படுத்த கொஞ்சம் அவகாசம் வேண்டும்... தீபாவளிக்கு தள்ளிப்போன துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்'




விஜயகாந்தின் மீது தீவிர பற்று 


மேலும் விஜயகாந்தின் மீது தீவிர பற்று கொண்டவர் ஆவார். அதன் காரணமாக தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உயிரிழந்ததை அடுத்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தனது ரத்தத்தினை சிறிய பாட்டிலில் எடுத்து, அதன் மூலம் விஜயகாந்தின் உருவத்தை வரைந்து, மறைந்த விஜயகாந்த் க்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். 


"போலீஸை தாக்கும் தைரியம் இனி யாருக்கும் வரக்கூடாது" பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்.. கொதித்தெழுந்த இபிஎஸ்




இரத்தத்தில் திருவள்ளுவர் உருவம் 


இந்நிலையில் மீண்டும் தனது ரத்ததினை பயன்படுத்தி தெய்வப்புலவர் திருவள்ளுவரை வரைத்துள்ளார் அரவிந்த்.  அதற்காக தனது உடலில் இருந்து 3 மில்லி இரத்தத்தினை வெளியில் எடுத்த அரவிந்த், அதனை கொண்டு தனது கைவிரல் ரேகை பதிப்பாக 1330 முறை கைரேகை பதிவு செய்து திருவள்ளுவரை வரைந்துள்ளார். இது தற்போது அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.


Mercedes Maybach EQS 680 EV: மெர்சிடஸ் மேபேக் EQS 680 EV கார் அறிமுகம் : ஃபர்ஸ்ட் லுக், அம்சங்கள் எப்படி இருக்கு?




அரசு பணி கோரிக்கை 


மேலும் அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியர் பணி வழங்கினால் அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களை ஊக்கப்படுத்தி ஓவிய திறமையை வெளிப்படுத்த உதவி செய்வேன் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


Prashanth about Vijay : தம்பி விஜய் எப்படிப்பட்டவர் தெரியுமா? 'தி கோட்' ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்டில் பிரஷாந்த் சொன்ன அந்த விஷயம்...