சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் அரசு வீடு கட்டும் திட்டத்திற்கு வழங்கப்படும் இரும்புக் கம்பிகள் திறந்த வெளியில் மாத கணக்கில் கிடந்து துருப்பிடித்தும் மழையிலும் வெயிலிலும் வீணாகி வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டி வருகின்றனர்.


சீர்காழி ஊராட்சி ஒன்றியம் 


மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் 37 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் தமிழக அரசின் கலைஞர் கனவு இல்லம் திட்டம் மற்றும் பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான இரும்பு கம்பிகள், சிமெண்ட் மூட்டைகள் ஆகியவை கணக்கீடு செய்யப்பட்டு, ஊராட்சி நிர்வாகம் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவது வழக்கம்.


“உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கிருஷ்ணா?” மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார் சந்திரசூட்..!




மண்ணோடு கிடந்து துருபிடிக்கும் கம்பிகள் 


இந்நிலையில் அரசு வீடு கட்டும் திட்டத்திற்காக பல டன் கணக்கில் இரும்பு கம்பிகள் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தின் வாயில் பகுதியில் ஒருபுறம் திறந்த வெளியில் பாதுகாப்பற்ற முறையில் போடப்பட்டுள்ளது. மேலும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் மழை வெயிலில் இந்த இரும்பு கம்பிகள் பல மாதங்களாக கிடந்து மண்ணோடு மண்ணாக இரும்பு கம்பிகள் துருப்பிடித்து வீணாகி வருகிறது. 


Liam Payne Death: மாடியில் இருந்து தவறி விழுந்த லியாம் பெய்ன்! பரிதாபமாக பறிபோன பிரபல பாப் பாடகர் உயிர்!




இரவு வேளையில் திருட்டு 


இந்த துருப்பிடித்த கம்பிகளை பயனாளிகளுக்கு வழங்கினால் கட்டப்படும் வீட்டின் தரம் கேள்விக்குறியாகும் அவலம் உள்ளது. மேலும் இந்த கம்பிகள் துருப்பிடித்து உடைந்து கிடப்பதால் அவற்றை இரவு நேரங்களில் சிலர் எடுத்துச் சென்று பழைய இரும்பு கடையில் எடைக்கு போட்டு பணம் பெறும் நிலையும் உள்ளது. ஆகையால் சீர்காழி ஊராட்சி நிர்வாகம் அரசு வீடு கட்டும் திட்டத்தில் உள்ள கம்பிகள் மற்றும் பொருள்களை வீணடிக்காமல், உரிய பயனாளிகளுக்கு தரத்தோடும் பாதுகாப்போடும் உரிய காலத்திலும் வழங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர். 


”துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சிக்கான அனுமதி திடீர் ரத்து” குருமூர்த்தி அதிர்ச்சி கொடுத்த மியூசிக் அகடாமி..!




வீணாகும் மக்களின் வரிப்பணம் 


மேலும் தமிழக அரசு நிதி பற்றகுறை என கூறி பல திட்டங்களை செயல்படுத்த திணறி வரும் சூழலில், மக்களின் வரிப்பணத்தை அரசு அதிகாரிகள் இவ்வாறு வீண் அடிப்பதை அரசு கவனத்தில் கொண்டு மேலும் தொடர்ந்து மக்களின் வரிப்பணம் இதுபோன்று பாழாகாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சென்னைக்கு ரெட் அலர்ட் வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு