மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், திருஇந்தளுர் பத்மவாசன் திருமண மண்டபத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 159 பயனாளிகளுக்கு 66 இலட்சத்து, 6 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமாமகேஸ்வரி சங்கள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


Lok Sabha Election 2024: வெற்றி வாய்ப்பு உள்ளோருக்குத்தான் மக்களவைத் தேர்தலில் சீட் கொடுக்கப்படும் - இபிஎஸ் திட்டவட்டம்




இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், "முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு துறைகள் சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அதன் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தினம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் வட்டங்களிலுள்ள பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசானது வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கி, அவர்கள் வீடு கட்டுவதற்கு தேவையான வழிவகைகளையும் செய்து வருகிறது. அரசின் திட்டங்களை மக்கள் அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.


Director Vinu Passed away: ஜெயராம் பட இயக்குநர் காலமானார்... சோகத்தில் மலையாள திரையுலகம்...


மயிலாடுதுறை வட்டத்தில் திருச்சிற்றம்பலம், ஐவநல்லூர், சித்தமல்லி, நல்லத்துக்குடி, கேசிங்கன், கோடங்குடி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 159 பயனாளிகளுக்கு 69 இலட்சத்து, 97 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்புள்ள இலவச வீட்டுமனை பட்டாக்களும், குத்தாலம் வட்டத்தில் நல்லாவூர், பெருஞ்சேரி, செங்குடி, ஆலங்குடி, மாதிரிமங்கலம், பாலையூர், கருப்பூர், கோடிமங்கலம், பழைய கூடலூர், ஸ்ரீகண்டபுரம், திருவாலங்காடு, காஞ்சிவாய், கோணேரிராஜபுரம், கோமல் கிழக்கு ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 85 பயனாளிகளுக்கு 23 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும் ஆகமொத்தம் 278 பயனாளிகளுக்கு 93 லட்சத்து, 77 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.


  Rahul Dravid Birthday: விட்டு வைத்த களத்திலே… சிங்கம் ஒன்று நுழையுதோ… The Wall (என்ற) ட்ராவிட்டின் 51வது பிறந்தநாள் இன்று!


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுலர் மணிமேகலை, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத்திட்டம் கண்மணி, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா, மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், மயிலாடுதுறை ஒன்றியக்குழுத் தலைவர் காமாட்சி மூர்த்தி, மயிலாடுதுறை வட்டாட்சியர் சபிதா தேவி, குத்தாலம் வட்டாட்சியர் சித்ரா மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பல கலந்து கொண்டனர்.


Sandeep Lamichhane: 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. கிரிக்கெட் வீரர் லாமிச்சானேவுக்கு 8 ஆண்டுகள் சிறை!