டாஸ்மாக் மட்டும் இயங்கும் சாலைக்கு குடிமகன்கன் வசதிக்காக 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை திமுகவைச் சேர்ந்த சேர்மன் குண்டா மணி (எ) செல்வராஜ் என்பவரது, மருமகன் ஒப்பந்தக்காரர், அதனால், சாலை போடப்படும் வெறும் 150 மீட்டருக்கு 30 லட்சம் மயிலாடுதுறை நகராட்சியில் ஒதுக்கி முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை நகரில் சமீபத்தில்  பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு சாலைகள் மிகவும் பழுதடைந்து நடப்பதற்கு கூட முடியாத நிலையில் காணப்படுகின்றது.




இந்நிலையில் தங்கள் பகுதிக்கு சாலை வேண்டுமென்று நகராட்சி கூட்டத்தில் நகராட்சி உறுப்பினர்கள் பலரும் ஒவ்வொரு போராடியும் எதற்கும் செவி சாய்க்காமல் பணம் இல்லை என்பதையை நகர்மன்ற தலைவரான திமுகவைச் சேர்ந்த குண்டாமணி (எ) செல்வராஜ், என்பவரின் பதிலாக இருந்து வந்துள்ளது. இந்த சூழலில், மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே பஜனை மட சந்து என்கிற இடத்தில், அரசு டாஸ்மாக் மட்டும்  இயங்கி வரும் பகுதிக்கு செல்லும் பாதைக்கு புதிதாக தார் சாலையாக போடுவதற்கு 30 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சம்பவம் மயிலாடுதுறை மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பேருந்து நிலையத்தின் ஒரு புறத்தில் இருந்து, இந்த பஜனைமட சந்து வழியாக பெரிய கடை வீதி செல்லலாம். ஆனால், ஏற்கனவே குடிமகன்கள் வசதிக்காக சாலையை தகர்த்தை வைத்து பேருந்துநிலையத்திற்கு வரும், முக்கிய சாலையை, திமுகவினர் அடைத்து அப்பகுதியில் பார் வைத்து நடத்தி வந்தனர்.




இந்நிலையில் மழைக்காலத்தில் தினம்தோறும், மதுபான  கடைக்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான குடிமகன்கள் வசதிக்காக புதிய தார், சாலை அமைக்க நகர்மன்ற தலைவர் குண்டாமணி (எ) செல்வராஜ் முடிவு செய்து, அதற்காக மயிலாடுதுறையைச் சேர்ந்த ரங்கராஜ் என்கிற தொழிலதிபர் உதவியுடன் நமக்கு நாமே திட்டத்தில் தொழிலதிபர் ரங்கராஜிடம் இருந்து 15 லட்ச ரூபாய் பங்களிப்புடன், நகராட்சியில் இருந்து 15 லட்சம் ரூபாய் பணம் ஒதுக்கீடு செய்து புதிய சாலை அமைக்கப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை பகுதியில் சாலை அமைக்க ஆயிரத்து 500 ரூபாய் மீட்டர் நீளத்திற்கே,  34 லட்ச ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில், அதில் 10 -ல் ஒரு மடங்குங்கு, குறைவாக உள்ள சாலைக்கு 30 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது நிகழ்வு மயிலாடுதுறை பகுதி பொதுமக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 




இதில் பெருமளவு முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் என்பவரின் மருமகன் சந்தோஷ் என்பவர் தான் இந்த சாலை போடும் ஒப்பந்தக்காரர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சமீபத்தில் தமிழக அரசின் மக்களைத் தேடி முதல்வர் என்ற திட்டத்திற்காக நகராட்சியில் நடைபெற்ற முகாம்களுக்கு செலவாக 15 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தொடர்ந்து நகர்மன்ற தலைவர் குண்டாமணி என்கிற செல்வராஜின் மருமகன் சாலை போட வேண்டும் என்பதற்காக, 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் மயிலாடுதுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Teachers Appointment: 2024-ல் வெறும் 1966 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம்: கல்வித்தரம் பற்றிக் கல்வியாளர்கள் வேதனை!