மயிலாடுதுறையில் வரையிலான மைசூர் ரயிலை கடலூர் வரை நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய அமைச்சர் எல்.முருகன் மேட்டுப்பாளையத்தில் இருந்து காணொளி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார்.


மைசூர் ரயில் 


மைசூரில் இருந்து மயிலாடுதுறை வரை இயங்கி வந்த ரயில் (எண்: 16231/16232) தற்போது கடலூர் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் இரண்டாவது பிளாட்பார்மில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் மேட்டுப்பாளையத்தில் இருந்து காணொளி வாயிலாக பங்கேற்று ரயிலை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.


TN New Governor : ”தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் யார் ?’ தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட போகும் தமிழர் இவரா..?




மயிலாடுதுறை எம்பி சுதா பங்கேற்பு 


மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் மற்றும் ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில், மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு வார நாட்களில் காலை 8.05 மணிக்கு சென்று வந்த ரயிலை வாரத்தில் 7 நாட்களும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு அதன் தொடக்க விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது.


NEET UG Counselling 2024: ஜூலை 24-ல் நீட் மருத்துவக் கலந்தாய்வு?- மொத்த இடங்களை உறுதிசெய்யக் கல்லூரிகளுக்கு உத்தரவு




மகிழ்ச்சியில் ரயில் பயணிகள் 


இதில் கட்சி மற்றும் வர்த்தக சங்க பிரமுகர்கள், ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த திருச்சி வரை செல்லும் ரயில் அனைத்து நாட்களும் செல்லவும், மயிலாடுதுறையில் வரையிலான மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது ரயில் பயணிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.


Thoothukudi-Mettupalayam Train: மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையே எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்கம்; பயணிகள் வரவேற்பு