பெண் குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் மினி மராத்தான் போட்டி

மயிலாடுதுறையில் பெண் குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தி நடைபெற்ற மினி மராத்தான் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

Continues below advertisement

மயிலாடுதுறையில் பெண் குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தி நடைபெற்ற 5 கிலோமீட்டர் தொலைவிலான மினி மராத்தான் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று வெற்றிப்பெற்றனர்.

Continues below advertisement

மினி மராத்தான் 

பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், பெண் குழந்தைகளுக்கு கற்பிக்கவும் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒன்றாக மயிலாடுதுறையில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கான மினி மராத்தான் போட்டி நடைபெற்றது. மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணைய மைதானத்தில் துவங்கிய மினி மராத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து துவங்கி வைத்தார். 

Medical Rank List: மருத்துவப் படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு; நாமக்கல் மாணவர் முதலிடம்- காண்பது எப்படி?


11 வயது முதல் 21 வயது வரையிலான மாணவிகள் 

இந்த போட்டியில் பாலின பாகுபாடு அடிப்படையில் குழந்தைகளின் பாலினம் அறிந்து கொல்லப்படுவதை தடுத்தல், பெண் குழந்தைகள் பிறப்பினை உறுதி செய்து, அவர்களின் கல்வி, திறன் மற்றும் பங்கேற்பினை மேம்படுத்தல், மற்றும் பெண்களை பாதுகாத்தலை வலியுறுத்தி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 11 வயது முதல் 21 வயது வரை உள்ள மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று 5 கிலோமீட்டர் தூரம் சென்று மன்னம்பந்தல் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போட்டி நிறைவடைந்தது. 

IBPS PO Recruitment 2024: 21-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்;வங்கி வேலை - 4,455 பணியிடங்கள்!


மாவட்ட ஆட்சியர் பாராட்டு 

இதில் சென்னை எம்.ஓ.பி கல்லூரி மாணவி கீதாஞ்சலி முதலிடத்தையும், குட் சாமாரிட்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆபியா இரண்டாம் இடத்தையும், எட்டாம் வகுப்பு மாணவி அனுரெக்சி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பாளர் சான்றிதழ்கள் வழங்கி மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கௌரவித்தார்.

Digital Marketing: தமிழ்நாடு அரசின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி; எப்போது? எங்கே?- முழு விவரம்!

Continues below advertisement
Sponsored Links by Taboola