தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் ‘தொழில் முனைவோர் - டிஜிட்டல் மார்க்கெட்டிங்’ பயிற்சி சென்னையில் நடைபெறுகிறது.
தமிழக அரசு தொழில்துறை தொடர்பாக பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இளைஞர்களுக்கு, பெண்களுக்கு தொழில் ரீதியிலாக பயிற்சி பெற வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன். அதன் ஒரு பகுதியாக, சென்னையில் 21.08.2024 முதல் 23.08.2024 ஆகிய மூன்று நாட்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி:
"தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் மின்னணு ஊடகம் மூலமாக சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி (Advanced Digital Marketing) வரும் புதன்கிழமை ( 21.02.2024) முதல் வெள்ளிக்கிழமை (23.08.2024) வரை தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5:45 மணி வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் “தொழில்முனைவோர்-டிஜிட்டல் மார்க்கெட்டிங் அறிமுகம் டிஜிட்டல் மார்க்கெட்டிங், தரவு கையாளுதல், சைபர் கொள்கை (விதிமுறைகள் & நிபந்தனைகள்) மார்க்கெட்டிங் உத்திகள், போட்டி சந்தைப்படுத்துதல், சமூக ஊடக தரவு, டிஜிட்டல் இருப்பு, தேவை மற்றும் வாடிக்கையாளர்களை இணைத்தல், டிஜிட்டல் ஆன்லைன் கருவிகள் மற்றும் ஆதரவு அமைப்பு ஆகியவை தலைப்புகளின் கீழ் உள்ளடக்கப்பட்ட பாடங்கள்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் அறிமுகம்: அடிப்படை, போக்குகள் மற்றும் முக்கியத்துவம், டிஜிட்டல் நிலப்பரப்பைப் புரிந்துகொள்வது: சமூக ஊடகங்கள், எஸ்.சி.ஓ மற்றும் கட்டண விளம்பரம், இலக்கு பார்வையாளர்களை அடையாளம் காணுதல்: உத்திகள் மற்றும் பார்வையாளர்களைப் பிரித்தல், டிஜிட்டல் இருப்பை உருவாக்குதல், சந்தை தேவைகளை உருவாக்குதல், வருவாய் மற்றும் வருவாய் மாதிரிகளை உருவாக்குதல், டிஜிட்டல் வணிக தீர்வுகள், இணைப்பு மற்றும் நெட்வொர்க்குகள் போன்ற பாட தலைப்புகள்பயிற்சியில் இடம்பெறும்.” என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் பங்கேற்கலாம்?
டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சியில் பங்கேற்க 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் ஆண், பெண், திருநர் ஆகியோர் தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டணம் வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி வசதி உள்ளது. இதற்கு விண்ணப்பித்து முன் பதிவு செய்து கொள்ளலாம்.
இணையதள முகவரி:
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in -என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்.
அலுவலக முகவரி:
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,
சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல்,
சென்னை – 600 032.
தொடர்பு எண்கள் - 044-22252081/22252082, 8668102600 / 86681 00181 / 7010143022.