சீர்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் நான்கு வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தி சாலை மறியல் ஈடுபட்டவர்களுடன், சாலையில் அமர்ந்து அவர்களின் கோரிக்கை கேட்டறிந்து மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் (காங்கிரஸ்) சுதா கேட்டறிந்து அவர்களிடம் கோரிக்கை மனுவை பெற்று சென்றார்.
நான்கு வழிச்சாலை
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையிலான 194 கி.மீ., துார நெடுஞ்சாலையை (45 ஏ), நான்கு வழிச்சாலையாக மாற்ற 6,431 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. அதில், விழுப்புரம் (ஜானகிபுரம்) - எம்.என்.குப்பம்; மங்கலம் முதல் கடலுார் குடிகாடு சிப்காட் , சிதம்பரம் - சீர்காழி சட்டநாதபுரம் - நாகப்பட்டினம் வரை என நான்கு பகுதிகளாக பிரித்து, 4 ஒப்பந்த தாரர்கள் மூலம் பணி நடந்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரத்தில் இருந்து ஆக்கூர், திருக்கடையூர், பொறையார் வழியாக காரைக்காலுக்கு வெளியே புறவழிச் சாலையாக கடந்து, நாகப்பட்டினத்தை அடைகிறது. சட்டநாதபுரம் - நாகப்பட்டினம் இடையிலான பணிகள் கடந்த 2020 ஜனவரி மாதம் துவங்கியது. பிரதமர் நரேந்திரமோடி இந்த பகுதி சாலை பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இப்பணிகளை கடந்த 2022 அக்டோபர் மாதத்துடன் முடிக்க காலக்கெடு வழங்கப்பட்டது. ஆனால் நில ஆர்ஜிதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னையால் இப்பணியில் தடைப்பட்டு காலதாமதம் ஆனது. தற்போது நிர்வாக சிக்கல்கள் படிப்படியாக குறைந்து பணிகள் துவங்கி நடந்து வருகிறது.
Savukku Sankar : 'என்னை பார்த்து திமுக அரசு அஞ்சுகிறது' - நீதிமன்றத்தில் முழக்கமிட்ட சவுக்கு சங்கர்
கிராம மக்கள் சாலை மறியல்
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலை அமைக்க மண் கொட்டப்பட்டு வருகிறது, இதனால் செம்பதனிருப்பு, காத்திருப்பு, நாங்கூர், அல்லிவிளாகம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் நான்கு வழிச்சாலை அமைத்தால் சாலை கடந்து செல்ல முடியாமல் சுமார் 5 கி.மீ தூரம் கடந்து செல்லும் நிலை உள்ளதால் சுரங்க நடைபாதை அமைத்து தர கோரி சாலை மறியல் போராட்டத்தில் கிராமமக்கள் ஈடுபட்டனர்.
சாலையில் அமர்ந்த எம்பி
இந்நிலையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க அவ்வழியே வந்த மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், உடன் சாலையில் அமர்ந்து பேச்சுவார்த்தை செய்து கோரிக்கை கேட்டு பின்னர் அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவை பெற்று சென்றார்.
TN Bus Ticket: தமிழ்நாட்டில் பேருந்துகள் கட்டணம் உயர்கிறதா? போக்குவரத்து துறை பதில் இதுதான்!
வார்த்தையை தொடர்ந்து மறியலை கைவிட்ட கிராம மக்கள்
நான்கு வழிச்சாலை அமைப்பதால் கிராம மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளதால் சுரங்க நடப்பாதை அமைத்து தர கோரி மறியலில் தொடர்ந்து பொதுமக்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து பாகசாலை போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் சீர்காழி வட்டாச்சியர் இளங்கோவன் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சீர்காழி - நாகை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.