ஒடிசாவில் விபத்தில் படுகாயம் அடைந்த மயிலாடுதுறையை சேர்ந்த லாரி ஓட்டுநர், லாரி உரிமையாளர் உட்பட யாரும் கண்டுகொள்ளாததால் மருத்துவ சிகிச்சையை தொடர முடியாமல் தவித்து வருவதாக தலை மற்றும் கைகளில் கட்டு போட்டதுடன் சிகிச்சையில் இருந்து பாதியிலேயே வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
செருதியூர் கிராமத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் ரமேஷ்
மயிலாடுதுறை மாவட்டம் செருதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கையன் என்பவரது மகன் ரமேஷ். ஓட்டுனராக பணிபுரிந்து வரும் இவருக்கு திருமணம் ஆகி, நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர் நாமக்கல்லை சேர்ந்த தனியார் லாரி உரிமையாளர் மோகனரங்கம் என்பவரிடம் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.
சாலையோரம் வசிக்கும் குழந்தைகளுடன் சூர்யா பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள் - மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி
விபத்துக்குள்ளான பயோ டீசல் லாரி
இந்த நிலையில் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு பயோ டீசல் ஏற்றிக்கொண்டு ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ளார் . அங்கு ஐஓசி நிறுவனத்தில் பயோ டீசலை கொடுக்கச் சென்ற நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை அடுத்த பத்ராக் பகுதியில் லாரியின் டயர் வெடித்து அதனால் வாகனம் நிலை தடுமாறி முன்னாள் சென்ற மற்றொரு லாரி மீது மோதிய விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் லாரியை ஓட்டிச் சென்ற ரமேஷ் கை மற்றும் தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்துள்ளனர்.
Budget 2024: இறக்குமதி வரி குறைப்பு; குறையும் மொபைல் போன் விலை - பட்ஜெட்டில் அறிவிப்பு!
வழக்கு பதியாமல் மீட்கப்பட்ட விபத்துக்குள்ளான லாரி
இந்த விபத்து குறித்து அறிந்து அங்கு வந்த லாரி உரிமையாளர் மோகனரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதியாமலும், விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த லாரி ஓட்டுநர் ரமேஷையும் பார்க்காமல் லாரியை மீட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் காப்பீடு தொகையும் கிடைக்கவில்லை. பின்னர் உறவினர்கள் ஒடிசா மாநிலத்திற்கு சென்று விபத்துக்குள்ளான ரமேஷை மீட்டு மயிலாடுதுறைக்கு அழைத்து வந்துள்ளனர்.
சிகிச்சையை தொடர்வதில் சிக்கல்
தொடர்ந்து மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த நான்கு மாதங்களாக சிகிச்சை பெற்று வரும் ரமேஷ், தற்போது வரை லட்சக் கணக்கில் பணம் செலவு செய்துள்ளதாகவும், இதனால் தற்போது வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக கூறி மருத்துவமனையில் இருந்து கை, கால் மற்றும் தலையில் கட்டுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் மற்றும் மனைவியுடன் வருகை தந்து மனு அளித்தார். மேலும் லாரி உரிமையாளரிடம் நிதியுதவி பெற்று தர வேண்டும் எனவும், மேற்கொண்டு சிகிச்சையை தொடர மாவட்ட நிர்வாகம் ஏதேனும் வழிவகை செய்ய வேண்டும் எனவும் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார். மருத்துவமனையில் இருந்து காயங்களுடன் வாழ்வாதார காக்க கோரி விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் குடும்பத்துடன் மனு அளித்த சம்பவம் காண்போரை கண் கலங்க செய்துள்ளது.