நடிகர் சூர்யாவின் பிறந்தநாளினை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே அவரது ரசிகர்கள் சாலையோரம் வசிக்கும் ஆதியன் பழங்குடியின மக்களுடன் ஒன்றிணைந்து கேக் வெட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஜூலை 23-ம் தேதி


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள சூர்யா இன்று தனது 49 -வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திரைப்பட நடிகர் சூரியா பிறந்தநாள் அன்று பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பது, அன்னதானம், இரத்ததானம், கல்வி உபகரணங்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 


இளைஞர்களுக்கு 5 அசத்தல் திட்டங்கள்.. மத்திய பட்ஜெட்டில் ரூ. 2 லட்சம் கோடியை ஒதுக்கிய நிர்மலா சீதாராமன்!




பலதரப்பட்ட வாழ்த்துகள் 


மேலும் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். அதேபோல் ரசிகர்கள் போஸ்டர், பேனர் என அவரது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனிடையே சூரியாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக நடிகர் சூர்யா 10 -க்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடிக்கும் கங்குவா படத்தின் முதல் பாடல் காலை 11 மணிக்கு வெளியானது. மிரட்டும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் வெளியான வீடியோ திரையுலகினரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


NEET UG 2024: நீட் தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்விக்கு எது சரியான விடை?- உச்ச நீதிமன்றத்தில் ஐஐடி பதில்




கங்குவா திரைப்படம் 


சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ரவி ராகவேந்திரா, கே.எஸ்.ரவிக்குமார், பி.எஸ்.அவினாஷ் உள்ளிட்ட பலரும்  நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இந்த படம் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கங்குவா படம் 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 


Elon Musk: இணையத்தை அதிரவிட்ட ஃபேஷன் ஷோ..! மோடி தொடங்கி எலான் மஸ்க் வரை, தாறுமாறான கெட்டப்




மயிலாடுதுறையில் பிறந்தாநாள் கொண்டாட்டம் 


இந்நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை மயிலாடுதுறை மாவட்ட சூர்யா ரசிகர்கள் நற்பணி மன்றத்தினர் ஒன்றிணைந்து கேக் வெட்டியும், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் செம்பனார்கோயில் காவல் நிலையம் எதிரே சாலையோரம் வசிக்கக்கூடிய ஆதியன் பழங்குடியின சமுதாய (நரிக்குறவர்) மக்களுடன் ஒன்றிணைந்து அங்குள்ள குழந்தைகள் கையால் கேக் வெட்டி சிறுவர்களுக்கு வழங்கினர். மேலும் அங்கு வசிக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட ஆதியன் பழங்குடியின இனமக்களுக்கு ஒரு வேலை மதிய உணவு வழங்கியும் அங்குள்ள குழந்தைகளுக்கு புத்தாடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளனர். 


Overpriced Motorcycles: இதுக்கு இவ்வளவு விலையா? பயனர்களை கடுப்பேற்றிய 5 பைக்குகள் - லிஸ்ட் இதோ..!




அங்குள்ள மக்கள் கேக் வெட்டி மகிழ்ச்சி பொங்க நடிகர் சூர்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். ஜெய் பீம் படத்தில் நடிகர் சூர்யா ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராடக்கூடிய கதாபாத்திரமாக நடித்திருப்பார். இந்த நிலையில் அவரது ரசிகர்களும் ஏழ்மை நிலையில் உள்ள மக்களை தேடிக் கண்டறிந்து அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருவது பலதரப்பு மக்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது. ஒன்றிய தலைவர் முகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் சூர்யா ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.