சிறுத்தை தென்பட்டு இன்றுடன் 20 நாட்கள்.


மயிலாடுதுறையில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை, 10 நாட்களாக தென்படாததால், வனத்துறையினர் திணறி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் பகுதிகளில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக, கடந்த ஏப்ரல் 2 -ம் தேதி காவல்துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், வனத்துறையினர் சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டனர். வனத்துறையினர் முடுக்கி விட்டனர்.




சிறுத்தை பிடிக்க எடுக்கும் நடவடிக்கை 


அதனைத் தொடர்ந்து ஆனைமலை, முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள், களப் பணியாளர்கள் வரவழைக்க கப்பட்டனர். பல்வேறு இடங்களில் கேமராக்கள் அமைத்தும், ட்ரோன் கேமரக்களை பயன்படுத்தியும், கூண்டுகள் வைத்தும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தினர். அதில் ஏப்ரல் 3 -ம் தேதி மயிலாடுதுறையில் சிறுத்தை புகைப்படம் கேமராவில் பதிவானதாக 6 - ஆம் தேதி புகைப்படம் ஒன்றை வனத்துறையினர் வெளிட்டனர். அதன்பின், சிறுத்தையின் நடமாட்டம் கேமராவில் பதிவாகவில்லை. சிறுத்தையின் எச்சம், சிறுநீர், காலடித்தடம் ஆகியவற்றின் அடிப்படையில், அதன் நடமாட்டத்தை கண்காணித்தனர்.




பல்வேறு மாவட்டங்களில் தேடுதல் வேட்டை 


சிறுத்தை தஞ்சாவூர், திருவாரூர் சென்றதாக கூறிய நிலையில் அங்கு சிறுத்தை சென்றதற்கான எவ்வித உறுதியான தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அரியலுார், பெரம்பலுார் எல்லைப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சந்தேகித்த வனத்துறையினர், சிறுத்தை பெரம்பலுாருக்கு சென்று இருக்கலாம் என, சந்தேகம் அடைந்தனர். மேலும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிறுத்தை நடமாட்டம் சிசிடிவி கேமராவில் பதிவானது. அதனை தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலான வனத்துறையினரின் தேடுதல் வேட்டையில், எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால் வனத்துறையினர் திணறி வருகின்றனர். மயிலாடுதுறையில் இருந்து நகர்ந்த சிறுத்தை அரியலுார், பெரம்பலுார் எல்லை நோக்கி சென்ற வரையிலான நிகழ்வு களுக்கு ஆதாரங்கள் கிடைத்தன. அதன் பின்னர் தற்போது 10 நாட்களாக, அது எந்த பகுதி நோக்கி செல்கிறது என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.




ஏதாவது கிராமத்தில் சென்றால், அதைப் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். சந்தேகத் துக்கு இடமான வகையில் ஆடு, நாய் போன்றவை இறந்து கிடந்தால், அதை வைத்து, சிறுத்தை நடமாட்டத்தை உறுதிப்படுத்தலாம். இதுபோன்ற எந்த தகவலும் இல்லாததால், மக்கள் வசிக்கும் கிராமங்களை தவிர்த்து, வேறு எங்கா வது சிறுத்தை பதுங்கி உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், மயிலாடுதுறை, அரியலுார், பெரம்பலுார் பகுதிகளில், தீவிரமாக கண்காணித்து வருகிறோம். விரைவில், இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என வனத்துறையினர் தெரிவித்தார். 


Mohan G: "தமிழக அரசே தடை செய்” .. திடீரென போர்க்கொடி தூக்கிய இயக்குநர் மோகன் ஜி.. என்ன நடந்தது?




வனத்துறையினர் மீது எழும் புகார்


வனத்துறையினர் கடந்த 20 நாட்களாக சிறுத்தையை தேடுவதில் சுனக்கம் காட்டுவதாகவும், இதன் மூலம் பல லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுவது ஒரு புறம் இருந்தாலும், சிறுத்தைக்கு தேடும் பணிக்கான செலவு என போலி கணக்கு மூலம் ஊழல் நடைபெற்று வருவதாகவும், இதன் மூலம் அதிக வருவாய் கிடைப்பதாலேயை சிறுத்தையை பிடிப்பத்தில் கால தாமதம் ஆகிறது என சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.


Behind The Song: "போறானே..போறானே” பாடல் இப்படி தான் உருவாச்சா? - வாங்க பார்க்கலாம்!