மயிலாடுதுறையில் ஐடிஐ படிக்கும் மாணவர் ஒருவரை சக மாணவர்கள் மற்றும் ஒரு இளைஞர் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
 


அதிகரிக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சினை 


தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு இடங்களில் படுகொலை சம்பவங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்படும் மோதல் போக்கு போன்றவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களிடையே பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் ஒருசில இடங்களில் நடக்கும் படுகொலை சம்பவங்கள் மக்களை பதறவைக்கும் வகையிலும் இருக்கிறது. கொலை சம்பவங்கள் நடைபெற்று முடிந்தபின்னர் குற்றம் இழைத்தோரின் மீது நடவடிக்கை எடுத்தாலும், குற்றங்கள் துளியும் குறையாமல் தொடர் கதையாகவே இருந்து வருகிறது.


நெடுஞ்சாலை துறையின் அலட்சியத்தால் பறிபோன இளைஞர் உயிர்..! மயிலாடுதுறையில் சோகம்




மயிலாடுதுறை வைரல் வீடியோ 


அதுபோன்ற நிகழ்வு தற்போது மயிலாடுதுறையில் நடந்தேறி உள்ளது.  மயிலாடுதுறையை  பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் மீது கூட்டமாக சேர்ந்து சக மாணவர்கள் தாக்குதல் நடத்தும் அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் தாக்கப்பட்டவர் மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயம் மடவிளாகம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மெய்கண்டார் தொழிற்பயிற்சி ஐடிஐ கல்லூரியில் பயிலும் மாணவர்கள் என கூறப்படுகின்றது. ஆனால், அது குறித்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.


அதிமுக ஆட்சிக்கு வந்த பின் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ. 2500 வழங்கப்படும் - ராஜேந்திர பாலாஜி




மாணவன் மீது தாக்குதல் 


காக்கி நிற ஐடிஐ சீருடை அணிந்துள்ள மாணவர் ஒருவர், தனது தரப்பு ஆதரவு கும்பலுடன், தன்னுடன் பயின்று வரும் சக மாணவர் ஒருவரை தாக்குகிறார். பின் வீடியோ காலில் பேசும் நபரிடம் மன்னிப்பு கேள் என்று கூறியபடி, அவரை விடலாமா? சிங்கம் என்று கேட்க, அவர் விடுங்கள் என்றதும் கன்னத்திலேயே அறை விடுகிறார். மேலும் அந்த மாணவரை தொடர்ந்து பல முறை தாக்குதல் நடத்துகின்றனர். தற்போது இந்த சம்பவத்தின் வீடியோவின் பேரில் விசாரணை நடத்த வேண்டும் என காவல்துறையினருக்கு கோரிக்கை வைத்தும், விசாரணை நடந்தி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் எனவும் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.


Vinesh Phogat: 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கை.. என்னவாகும் வினேஷ் போகத் வழக்கு? வழக்கறிஞர் விளக்கம்


காவல்துறையினர் விசாரணை 


இச்சம்பவம் தொடர்பாக  மயிலாடுதுறை காவல் நியைத்திற்கு புகார் வரவில்லை என்றும், உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Save Soil : வேளாண் சார் தொழில் கனவுகளுக்கு கைகொடுக்கும் அரசுத் திட்டங்கள்! விளக்குகிறார் TNAU ஏ.வி. ஞானசம்பந்தம்