மயிலாடுதுறையில் பொதுவழி பாதையை அடைத்து சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள மதுபான பாரை அகற்ற கோரி பாரதிய ஜனதா கட்சியினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளனர். 


டாஸ்மாக் இடையூறுகள்


தமிழகத்தில் டாஸ்மார்க் மது கடைகளுக்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என்று பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடையை முற்றுகை இடுவதே உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. மேலும் பெரும்பாலான அரசு மதுபான கடைகள் பொதுமக்களுக்கும், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையூற ஏற்படுத்தும் வண்ணம், கோயில்கள் கல்வி நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் மிகுந்த இன்னல்களை நாளுக்கு நாள் சந்திக்க நேரிடுகிறது. இந்த சூழலில் மயிலாடுதுறையில் பொது பாதையினை மக்கள் பயன்படுத்தாத வண்ணம் அடைத்து மதுபான பார் அமைத்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




பஜனைமட சந்தில் அமைந்துள்ள டாஸ்மாக் 


மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் அருகே பஜனைமட சந்து என்கின்ற இடத்தில் அரசு மதுபான டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இக்கடைக்கு மது பிரியர்கள் பத்திரமாக சென்று வருவதற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக சாலை போடப்பட்டது. மேலும் பேருந்து நிலையத்தின் ஒரு புறத்தில் இருந்து இந்த பஜனைமட சந்து வழியாக பெரிய கடை வீதி செல்லலாம். 




துண்டிக்கப்பட்ட பொதுவழி பாதை


இந்த சூழலில் இந்த சாலையின் குறுக்கே பாதையை துண்டிக்கும் விதமாக தகரத்தை வைத்து அடைத்து டாஸ்மாக் நிர்வாகம் பார் வைத்து நடத்தி வருகிறது. இதனால் அந்த சாலை முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் முற்றிலும் இந்த சாலையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 


MK Stalin On Cabinet Reshuffle : “அமைச்சரவையில் மாற்றமா?” முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னது இதுதான்..!




பாரதிய ஜனதா கட்சியினர் புகார் மனு 


இதனிடையே பாரதிய ஜனதா கட்சியினர் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வண்ணம் பொதுவழி பாதையாக பயன்படுத்துவதற்கு ஏதுவாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதிக்கு ஆன்லைன் மூலம் புகார் மனு அளித்தனர். மேலும் பாரதிய ஜனதா மயிலாடுதுறை மாவட்ட துணை தலைவர் மோடி கண்ணன் தலைமையில் அனுப்பட்ட மனுவில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தீர்வு காணப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.




மயிலாடுதுறை நகரில் பல்வேறு சாலைகள் மிகவும் பழுதடைந்து நடப்பதற்கு கூட முடியாத நிலையில் காணப்படுகின்றது. இந்நிலையில் தங்கள் பகுதிக்கு சாலை வேண்டுமென்று நகராட்சி கூட்டத்தில் நகராட்சி உறுப்பினர்கள் பலரும் ஒவ்வொரு போராடியும் எதற்கும் செவி சாய்க்காமல் பணம் இல்லை என்பதையை நகர்மன்ற தலைவரான திமுகவைச் சேர்ந்த குண்டாமணி (எ) செல்வராஜ், என்பவரின் பதிலாக இருந்து வந்துள்ளது. இந்த சூழலில், மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே பஜனை மட சந்தில் அரசு டாஸ்மாக் மட்டும் இயங்கி வரும் பகுதிக்கு செல்லும் பாதைக்கு புதிதாக தார் சாலையாக போடுவதற்கு 30 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.