மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழை மற்றும் கடல் சீற்றமாக காணப்படும் நிலையில் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் இன்று அக்டோபர் 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் அதீத கனமழைபெய்யும் என்பதால் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் சென்னை பல மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Rain News: ”வடமாவட்டங்களில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் கனமழை” தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
மழை எச்சரிக்கை
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, நாளை தினம் அக்டோபர் 16 -ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. அதேபோன்று புதுச்சேரி மாநிலம் புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் நிலவரம்
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை முதல் இன்று காலை மணி வரை மிதமான மழையானது பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணியில் இருந்து இன்று காலை 8.30 மணி வரையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மயிலாடுதுறையில் மாவட்டத்தில் சராசரியாக 27.95 மில்லிமீட்டர் மழையானது பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 24.50 மிமீ, மணல்மேடு 26 மிமீ, சீர்காழி 27.20 மிமீ, கொள்ளிடம் 25.80 மிமீ, தரங்கம்பாடி 26.60 மிமீ,செம்பனார்கோவில் 36.60 மிமீ என மொத்தம் மாவட்ட முழுவதும் பரவலாக 166.70 மிமீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக செம்பனார்கோவில் 36.60 மிமீ மழையும், குறைந்த அளவாக மயிலாடுதுறையில் 24.50 மிமீ, பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மேலும் இரவு 10:30 மணி முதல் இன்று காலை 6:30 மணி வரை மழை பொழிவு இல்லாத நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்படவில்லை. தொடர்ந்து மழையின் அளவு குறைந்துள்ள போதிலும், மாவட்டத்திலுள்ள 28 கடலோர மீனவர் கிராமங்களில் மிதமான காற்று வீசுவது உடன், கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக அனைத்து கிராம மீனவர்களும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு சென்றுள்ள மீனவர்கள் கரை திரும்பவும் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள கடலுக்கு செல்லாத விசைப்படகுகள், பைபர் படகுகள் முகத்துவாரங்கள் மற்றும் மீன்பிடி துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.
EB Warning: ”பாதுகாப்பா இருங்க மக்களே.. இதையெல்லாம் செய்யாதீங்க” மின்சார வாரியம் எச்சரிக்கை