சீர்காழி அருகே கழிவறையில் குடியிருந்து வந்த வயதான மாற்றுத்திறனாளி தாய் மற்றும் மகனுக்கு சமூக ஆர்வலர்கள் பாரதிமோகன் வீடுகட்டி கொடுத்த நிகழ்வு பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது. சமூகத்தில் சேவை செய்ய நேரமில்லாதவர்கள், நேரமிருந்தும் மணமில்லாதவர்களுக்கு மத்தியில்தான், தங்கள் நேரத்தை, வாழ்நாட்களை சேவை செய்வதற்காக அர்ப்பணித்தவர்களும் வாழ்ந்து வருகிறார்கள். அப்படிபட்ட மனிதர்களில் ஒருவர் தான் பாரதிமோகன்.


வெளிநாட்டில் இருந்து திரும்பிய சமூக ஆர்வலர்


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் பாரதிமோகன். வெளிநாடு சென்றுவிட்டு தாயகம் (இந்தியா) திரும்பியுள்ள இவர், மயிலாடுதுறை சாலைகளில் ஒருவேளை உணவிற்கு கூட வழியில்லாமல் தவித்து வரும் ஆதரவற்ற முதியவர்களை கண்டு வேதனையடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்த பாரதிமோகன், அவரது பெயரிலேயே அறக்கட்டளை ஒன்றை தொடங்கி, ஆதரவற்றவர்களை தேடி உணவு வழங்க தொடங்கினார். 




தேடி தேடி செய்யப்படும் உதவிகள்


யாரும் உறவுகள் இன்றி இருக்கும் ஆதரவற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை தேடிப்பிடித்து அவர்களுக்கு முடி திருத்தம் செய்து அவர்களை தூய்மைப்படுத்தும் சேவைப் பணியையும் செய்து வருகிறார். கடந்த 2012 -ஆம் ஆண்டு முதல் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரியும் ஆதரவற்ற நபர்களை தூய்மைப்படுத்தி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பாரதிமோகன், இதுவரை 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு உதவி செய்துள்ளார்.




அதுமட்டுமின்றி வீடு இன்றி வாழும் ஏழை எளிய குடும்பங்களை கண்டறிந்து, பல்வேறு தரப்பினரின் உதவியினை பெற்று அவர்களுக்கு வீடுகளை கட்டி கொடுத்து வருகிறார். இவரது சேவையை பாராட்டி கோயம்புத்தூர் கோல்டன் ஹியூமன் பீஸ் பல்கலைக்கழகம் பாரதி மோகனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. 


Mahavishnu: மகாவிஷ்ணுவை 3 நாள் போலீஸ் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி; அடுத்து என்ன.?




கழிவறையில் வசித்த மாற்றுத்திறனாளிகள்


இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பியன் வேலன்குடி கிராமத்தில் வயதான கண்பார்வையற்ற மாற்று திறனாளி காசியம்மாள் மற்றும் அவரது மகன் மதியழகன் ஆகிய இருவரும் ஆதரவற்ற நிலையில், அவர்கள் வசித்து வந்த ஓலை குடிசை முற்றிலும் பழுதடைந்து, தங்க வழியின்றி அரசு சார்பில் கட்டிகொடுக்கப்பட்ட கழிப்பறையில் தங்கி வாழ்ந்து வந்துள்ளனர். இதனை அறிந்த பாரதி மோகன் அவர்களின் நிலையை நேரில் சென்று அறிந்து , உடனடியாக அவரது பாரதிமோகன் அறக்கட்டளை மூலம் உதவி செய்ய முடிவெடுத்து, அவர்களுக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய வீட்டினை கட்டியுள்ளார்.


”வேலியே பயிரை மேய்ந்த கதை” - ஆசிரியர்களே மாணவர்களை மிரட்டி பாலியல் சீண்டல் - நெல்லையில் நடந்த கொடுமை




அந்த வீட்டினை வழங்கும் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பாரதிமோகன் முதியோர் இருவருடன் இணைந்து ரிப்பன் வெட்டி, பூஜை செய்து ஒப்படைத்தார். மேலும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு பால் காய்ச்சி கொண்டாடினர். மேலும் அப்பகுதி சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் பண உதவிகளை வழங்கினார். இவரின் இந்த சேவையை அப்பகுதி மக்கள் மனதார பாராட்டிய வருகின்றனர்.