மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோதமாக தடைப்பட்ட புகையிலை மற்றும் பான் மசாலா விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைத்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை 


மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் பயன்பாடு நாள் தோறும் அதிகரித்து வருவதாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இதனால் இளைஞர், முதியவர்கள் மட்டுமின்றி கல்லூரி, பள்ளி மாணவர்கள் கூட அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப், கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை வஸ்துகளை அதிகளவில் பயன்படுத்துவதாக அண்மையில் செய்திகள் வெளியானது. 




மாவட்ட முழுவதும் தீவிர சோதனை 


இதனை அடுத்து, மயிலாடுதுறை மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு சோதனைகள் நடைபெற்றது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, கஞ்சா விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டார்.


9 நாட்கள் வெறும் சுடுதண்ணீர் மட்டும் அருந்தி பர்யுஷன் பர்வா நோம்பிருந்த இளைஞர் - எங்கே தெரியுமா?


காவல்துறையினருக்கு ரகசிய தகவல்


அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர சோதனையில் இடப்பட்டு அவ்வபோது, கைது நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் குத்தாலம் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் கடைகளில் தடை செய்யப்பட்ட புகயிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 




மூன்று கடைகளுக்கு சீல் 


அடிப்படையில் குத்தாலம் பகுதியில் அமைந்துள்ள கடைகளை நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் ஆலோசனைப்படி மயிலாடுதுறை நகராட்சி மற்றும் குத்தாலம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன் அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது தேரழுந்தூர் தேரடி பகுதியைச் சேர்ந்த மஜீத் சம்சுதீன் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் சட்டவிரோதமாக புகையிலை மற்றும் பான் மசாலா விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது ,அதனைத் தொடர்ந்து அக்கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் வாணாதிராஜபுரம் மெயின் ரோடு முகமது ரிஸ்வான் என்பவருக்கு சொந்தமான கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.


Tilak Varma: தீவிர பயிற்சியில் திலக் வர்மா! அடுத்த என்ன நடக்கும்? அவரே சொன்ன பதில்


25 ஆயிரம் அபராதம் 


இதே போல பெரம்பூர் காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட மேலமங்கநல்லூர் செக்கடி தெரு ராஜேந்திரன் என்பவரது மளிகை கடை என மூன்று கடைகளுக்கு சீல் வைத்தனர். இந்த நடவடிக்கைகளை மயிலாடுதுறை நகராட்சி மற்றும் குத்தாலம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன் காவல்துறையினர் உதவியுடன் மூன்று கடைகளுக்கும் சீல் வைத்தார். மேலும் மாநில உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவுப்படி சீல் வைக்கப்பட்ட கடைகளுக்கு தலா 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட புகழைப் பொருட்கள் விற்பனை குறித்து மாநில உணவு பாதுகாப்பு ஆணையருக்கு 94 4404 23 22 என்ற whatsapp எண்ணில் புகார் மற்றும் தகவல் தெரிவிக்கலாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.