காவிரி கடைமடை மாவட்டம் 


காவிரி டெல்டாவின் கடைமடை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்டம். இங்குள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். மேலும் காவிரி நீரை மட்டும் இன்றி இங்கு பல பகுதிகளில் நிலத்தடி நீரையும் பயன்படுத்தி சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் மின்சார பற்றாக்குறையால் தற்போது இப்பகுதி விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


Kishori Lal Sharma: அமேதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கும் கிஷோரி லால் சர்மா! யார் இவர்?




நிலத்தடி நீரை கொண்டு விவசாயம் 


மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு தமிழக அரசு வழங்கிய மும்முனை மின்சாரம் மூலம் மின்மோட்டார் உதவியுடன் நிலத்தடி நீரை பயன்படுத்தி 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இதன் இடையே இந்த ஆண்டு விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை துவங்கியுள்ள நிலையில் மின்சாரத்துறையால் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை என பல்வேறு பகுதிகளில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 12 மணி நேரம் வழங்கப்பட்டு வந்த மின்சாரம் தற்போது வெறும் 3 மணி நேரம் மட்டுமே விவசாயத்திற்கு மின்சாரம் வழங்கப்படுவதால் விவசாயிகள் குருவை சாகுபடி பணிகளை தொடர்ந்து செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். 


PM Modi on Rahul Gandhi: அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் - பிரதமர் மோடி பேச்சு!




அங்கங்கே வெடிக்கும் போராட்டம் 


இந்த சூழலில் மும்முனை மின்சாரம் வழங்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறி இரண்டு தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை நகர் பகுதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் மீண்டும் அதே கோரிக்கைமை வலியுறுத்தியும், சோழம்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்த நிலையில் அதனை கண்டித்து மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் மூவலூர் என்ற பகுதியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Agni Natchathiram 2024: நாளை ஆரம்பமாகும் அக்னி நட்சத்திரம்.. வெயிலின் கோரத்தாண்டவம்.. வெப்பநிலை எப்படி இருக்கும்?




உறுதியளித்த மின்வாரிய அதிகாரிகள் 


அப்போது தொடர்ந்து மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும், தடையில்லா மின்சாரம் விநியோகிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் முறையான குடிநீர் கிடைக்காததால் கோடைகாலத்தில் பொதுமக்கள் அவதியுரும் நிலை ஏற்படுவதால் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல் துறை துணை கண்காணிப்பாளர் திருப்பதி மற்றும் மின்சார வாரியத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்கப்படும் என உறுதி அளித்ததன் அதனை ஏற்று சாலைமறியல் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து களைந்து சென்றனர்.


Used Cars Tips: செகண்ட் ஹேண்ட் கார் வாங்க திட்டமா? ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் உங்களுக்கான சரியான கார்கள் லிஸ்ட்