மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற 29 -ஆம் தேதி நடைபெறவுள்ள விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் 30 விவசாயிகள் வரை பேச அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


விவசாயிகள் குறைதீர் கூட்டம் 


ஒவ்வொரு மாதத்தின் கடைசி வாரத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் விவசாயம் சார்ந்த துறை சார்ந்த அதிகாரிகளுடன் விவசாயிகளும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை அரசிடம் தெரிவித்து அதற்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.




பிரதான தொழிலான விவசாயம் 


டெல்டா  மாவட்டங்களில் காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாவட்டத்தில் விவசாயம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக நிலத்தடி நீரை கொண்டு இப்பகுதியில் அதிக விவசாயம் நடைபெறுவதால் சம்பா மற்றும் குறுவை சாகுபடி பெருமளவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் நெல் மற்றும் இன்றி மாற்று பயிராக வாழை, கரும்பு, மஞ்சள், பருத்தி, மற்றும் காய்கறி வகைகளும் பயிரிடப்பட்டு இப்பகுதி விவசாயிகள் விவசாயத்தை தீவிரமாக செய்து வருகின்றன. இந்த நிலையில் அரசு அறிவிக்கும் திட்டங்கள் உள்ளிட்ட பயன்களை முழுமையாக பெறுவதற்கும் தங்கள் குறைகளை அரசுக்கு தெரிவிப்பதற்கும் இந்த விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இவ்மாவட்டத்தில் பார்க்கப்படுகிறது.


Men Lifestyle: 30 வயதான ஆண்மகன்களே..! வாரத்திற்கு 150 நிமிடங்கள் டார்கெட், டூர் ஒகே ஆனா போன் எப்படி?




29 -ம் தேதி நடைபெறும் கூட்டம் 


அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வருகின்ற நவம்பர் 29 -ஆம் தேதி நடைபெற உள்ளது‌. இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மயிலாடுதுறை மாவட்ட 2024 நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மகாபாரதி தலைமையில் 29.11.2024 அன்று காலை  10.00  மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.


Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!




கூட்டத்தில் கலந்துகொள்ளும் துறைகள்


இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்று வேளாண்மை, நீர்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தோட்டக்கலை துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடர்புடைய கருத்துகளை தெரிவிக்கலாம். 


Science Teacher Award: ''விருதுக்கு நாங்க தகுதி இல்லையா?'' அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் வேதனை




30 விவசாயிகளுக்கு அனுமதி 


மேலும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பேச விரும்பும் விவசாய சங்க தலைவர்கள், விவசாய பிரதிநிதிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் அனைவரும் கூட்டம் நடைபெறும் நாள் அன்று காலை 9.30 மணி முதல் பதிவு மேற்கொண்டு டோக்கன் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட சங்கங்களில் இருந்து சங்க தலைவர்கள் 15 நபர்களும், தனிப்பட்ட விவசாயிகள் 15 நபர்களும் ஆக கூடுதலாக 30 விவசாயிகள் பேசலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.