Men Lifestyle: ஆண்கள் தங்களது 30வது வயதிலிருந்து கடைபிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


ஆண்களுக்கான பழக்க வழக்கங்கள்:


ஆண்களுக்கு 30 வயது என்பது அவர்களது வாழ்க்கையின் மிகவும் முக்கியமான கட்டமாகு. அதை கடக்கும் முன் எல்லாம் சரியாக தான் இருக்கும். விரும்பியதை சாப்பிடுகிறார்கள், எந்த மாதிரி உணவு எடுத்தாலும், என்ன சாப்பிட்டாலும், எவ்வளவு சாப்பிட்டாலும் பிரச்சனைகள் வராது. அவர்கள் விரும்பியதைச் செய்கிறார்கள். கட்டுப்பாடு போன்ற பொறுப்புகளும் அவ்வளவாக இல்லை. ஆனால், இதெல்லாமே 30ஐ அடைந்த பிறகு முற்றிலுமாக மாறிவிடும். அப்படி மாற விரும்பாத போது, மேலும் பிரச்சனைகளை சந்திக்க விரும்பாத போது, ​​உங்கள் வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்.  வயதாகும்போது உடலில் சிறுசிறு மாற்றங்கள் காணப்படும். பணிச்சுமை மற்றும் குடும்ப சூழல் உங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இந்த நிலையில் மனதளவிலும், உடலளவிலும் வலுவாக இருக்க, வாழ்க்கைமுறையில் பல மாற்றங்களைச் செய்ய வேண்டும். 


வாழ்க்கை முறையில் வரவேண்டிய மாற்றங்கள்:


உடற்பயிற்சி: உடற்பயிற்சியை தவறாமல் செய்ய வேண்டும். வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் ஒர்க் அவுட் செய்ய வேண்டும். 


சரிவிகித உணவு: 30 வயதுக்கு முன்பு வரை எப்படி சாப்பிட்டாலும் பரவாயில்லை.. ஆனால் 30களில் உணவில் அக்கறை காட்ட வேண்டும். பழங்கள், காய்கறிகள் மற்றும் புரதங்கள் உணவில் சேர்க்கப்பட வேண்டும். 


மன அழுத்தம்: மன அழுத்தத்திற்கு பல காரணங்கள் உள்ளன. எனவே அவற்றிலிருந்து விடுபட தியானம், யோகா, ஆழ்ந்த சுவாசம் போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும். 


தூக்கம்: இரவு தூக்கம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. எனவே ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 


உறவுகள்: நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கவும். உங்களை சிரிக்க வைக்கும் நபர்களை தவறாமல் சந்தித்தாலும் நீங்கள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள். 


ஆரோக்கியம்


30 வயதிற்குட்பட்டவராக இருந்தால், நீங்கள் வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறியலாம். மேலும் மன ஆரோக்கியத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள். இந்த நேரத்தில் கவலை மற்றும் மனச்சோர்வு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே மனநலத்தில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும். எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் நீண்ட கால பிரச்சனைகள் ஏற்படும். புகைபிடிப்பதை முற்றிலுமாக நிறுத்துங்கள். போதைப் பழக்கம் மட்டுப்படுத்தப்பட வேண்டும். 


பின்பற்ற வேண்டிய ஆலோசனைகள்:


தினமும் குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். முடிந்தவரை ஃபோன் பயன்பாட்டை குறைக்கவும். உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் பொழுதுபோக்குகளை தொடர வேண்டும். அது உங்களின் மனநலனை பாதுகாக்கிறது. ஓய்வெடுக்க நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் ஒரு பயணம் செல்லலாம். மன அழுத்தத்தைக் குறைக்க நேர மேலாண்மையைப் பயிற்சி செய்யுங்கள்.


முதலீடுகள் அவசியம்



இவற்றுடன்,  முதலீடுகளையும் சேமிப்பையும் தொடங்க முயற்சி செய்யுங்கள். 20களில் இவற்றில் கவனம் செலுத்துவது நல்லது. ஆனால் 30 பெரியது அல்லது பழையது அல்ல. எனவே, 30 வயதில் முதலீடு செய்து சேமிக்க திட்டமிட்டால், எதிர்காலம் நன்றாக இருக்கும். டேர்ம் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதும் நல்லது. செல்வம் இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்பதை அங்கீகரிக்க வேண்டும்.