தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறை அரசினர் மகளிர் பள்ளியில் மாணவிகளை "HBD APPA" என்ற எழுத்து வடிவத்தில் அமர வைத்து ட்ரோன் மூலம் பதிவு செய்து அதனை திமுகவினர் ட்ரெண்ட் ஆக்கியுள்ளனர்.
மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாள்
தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாள் இன்று சனிக்கிழமை திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
HBD APPA எழுத்து வடிவில் அமர்ந்த மாணவிகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் கொண்டாமாக மயிலாடுதுறையில் அரசினர் மகளிர் பள்ளியில் 250 மாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் தட்டுகளை வழங்கிய திமுகவினர், பள்ளி மாணவிகளை "HBD APPA" என்ற எழுத்து வடிவத்தில் அமர வைத்து ட்ரோன் மூலம் பதிவு செய்து ட்ரெண்ட் ஆக்கியுள்ளார்.
Zelensky Feels: பேசுறதெல்லாம் பேசிபுட்டு, இப்ப ஃபீல் பண்ணா என்னா அர்த்தம்.? ஜெலன்ஸ்கி கூறுவது என்ன.?
மயிலாடுதுறை மாவட்டம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக முதலமைச்சர் 72 -வது பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை நகர மன்ற உறுப்பினரும், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளருமான சர்வோதயன் ஏற்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் செல்வராஜ் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி பள்ளி மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினர்.
வைரல் வீடியோ
அப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பள்ளி மாணவிகள் ஹாப்பி பர்த்டே அப்பா என்று எழுத்து வடிவில் அமர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சி பார்ப்போரை சற்று கவர்ந்தது. இதனை வீடியோவாக பதிவு செய்த திமுகவினர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலை தற்போது அது வைரலாக பரவி வருகிறது. இந்நிகழ்ச்சியில் திமுக பொது உறுப்பினர் சிவதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.