தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் சுமார் 1 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். சென்னையில் பொதுமக்கள் கல்வி, வேலை உள்ளிட்ட தேவைகளுக்கு பேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ சேவைகளை நம்பியே பெரும்பாலும் உள்ளனர். குறிப்பாக, சென்னையில் தொடக்க காலம் முதல் பேருந்து சேவையை நம்பி லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர்.

அவர்களின் தேவைக்காக சொகுசுப்பேருந்து, தாழ்தள பேருந்து, சாதாரண கட்டண பேருந்து, மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில்  புதியதாக 72 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதில் 50 சதவீத வழித்தடங்கள் பேருந்து, மெட்ரோ அல்லது ரயில் நிலையங்களைச் சென்று சேரும் வகையில் இயக்கப்பட உள்ளது. 

திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் வழித்தடங்களில் இந்த மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ம மொத்தமுள்ள 72 வழித்தடங்களில் 33 வட சென்னையிலும், 39 வழித்தடங்கள் தென்சென்னையிலும் இ்யக்கப்பட உள்ளது. 

வட சென்னை:

ஆர்டிஓ சென்னை ( வடகிழக்கு)

1. விம்கோ மெட்ரோ பேருந்து நிறுத்தம் - சத்துவா கேட், பொன்னேரி சாலை

2. காலடிப்பேட் மெட்ரோ பேருந்து நிறுத்தம் - சுனாமி காலனி

3. மணி பெட்ரோல் பங்க்( சுங்கச்சாவடி அருகே) - விம்கோ நகர் மெட்ரோ பேருந்து நிறுத்தம்

4. திருவொற்றியூர் தேரடி மெட்ரோ - கங்கையம்மன் நகர்

5. படவட்டம்மன் கோயில் - எண்ணூர் சாய்பாபா கோயில்

6. திருச்சினாங்குப்பம் ( பெரியபாளையத்து அம்மன் கோயில்) - பட்டினத்தார் கோயில் ( எண்ணூர் பைபாஸ்)

ஆர்டிஓ சென்னை (வடக்கு)

7. மாதவரம் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் - மாதவரம் பேருந்து முனையம்

8. மாதவரம் பேருந்து நிலையம் - மாதவரம் பழைய பேருந்து நிலையம்

9.புத்தகரம் டார்வின் பப்ளிக் பள்ளி - மாதவரம் மாஞ்சம்பாக்கம் சிறிய ரவுண்ட் அபோட்

10. ரெட்டேரி மேம்பால பேருந்து நிறுத்தம் - ரெட்டேரி மேம்பால பேருந்து நிறுத்தம்( லூப் ரூட்)

11. மாதவரம் ரவுண்ட்அபோட் - மாதவரம் டிப்போ பேருந்து நிறுத்தம்

12. மாதவரம் ரிலையன்ஸ் மார்க்கெட் பஸ் ஸ்டாப் - மாதவரம் ஸ்மால் ரவுண்ட்அபோட்

13. மாதவரம் எம்எம்பிடி பேருந்து முனையம் - எம்2 மாதவரம் பால்பண்ணை காவல் நிலையம், அருள்நகர் பேருந்து நிறுத்தம்

ஆர்டிஓ பூந்தமல்லி:

நொளம்பூர் பேருந்து நிலையம் - பருத்திபட்டு செக்போஸ்ட்

பூந்தமல்லி -வானகரம் டோல்கேட்

மதுரவாலய் லேக் சாலை - அயப்பாக்கம்

அம்பத்தூர் எஸ்டேட் - வளசரவாக்கம்

வளசரவாக்கம் முனிசிபலிட்டி ஆபீஸ் - மதுரவாயல் லேக் சாலை

குமணன்சாவடி ஜங்ஷன் - ஐயப்பன்தாங்கல்

வானகரம் பேருந்து நிறுத்தம் - ஐயப்பன்தாங்கல் பேருந்து நிறுத்தம்

போரூர் டோல்கேட் - வேலப்பன்சாவடி

வளசரவாக்கம் முனிசிபல் ஆபீஸ் - வானகரம் பேருந்து நிறுத்தம்

ஆர்டிஓ அம்பத்தூர்:

மகளிர் இண்டஸ்ட்ரியஸ் எஸ்டேட் - ஆவடி பேருந்து நிலையம்

அம்பத்தூர் டெலிபோன் எக்சேஞ்ச் - முருகப்பா பாலிடெக்னிக் காலேஜ்

அம்பத்தூர் முனிசிபல் ஆபீஸ் - அம்பத்தூர் ரயில் நிலையம் ( வழி; ஒரகடம்)

ஸ்டெட்போர்ட் மருத்துவமனை - முருகம்பேடு பிள்ளையார் கோயில் தண்ணீர்தொட்டி

அரிக்கம்பேடு - ஆவடி பேருந்து நிலையம் அருகில்

முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி - அம்பத்தூர் ஓடி பேருந்து நிலையம் ( வழி; கோயில்பதாகை, பூம்புகார் நகர்)

காட்டூர் பேருந்து நிலையம் - முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி

திருமங்கலம் கலெக்டர் நகர் - அம்பத்தூர் ரயில் நிலையம்

அம்பத்தூர் டன்லூப் பேருந்து நிலையம் - பம்மத்தகுலம்

ஆர்டிஓ ரெட்ஹில்ஸ்:

ஆண்டார்குப்பம் பேருந்து நிலையம் - விம்கோ நகர் ரயில் நிலையம்

எண்ணூர் பேருந்து நிலையம் - பட்டமந்திரி

தென்சென்னை:

காரப்பாக்கம் - இன்ஃபோசிஸ்

ஓஎம்ஆர் சர்வீஸ் சாலை, காரப்பாக்கம் - துரைப்பாக்கம் 200 அடி சாலை

ஃபுட் கோர்ட் துரைப்பாக்கம் - பெருங்குடி ரயில் நிலைய சாலை

எஸ். கொளத்தூர், டிஏவி பள்ளி - மயிலை பாலாஜி நகர்

எஸ்.கொளத்தூர் - அஸ்தினாபுரம் பிரதான சாலை

கஸ்டம்ஸ் காலனி, துரைப்பாக்கம் - ஒக்கியம் துரைப்பாக்கம்

கோவிலாம்பாக்கம் - காமாட்சி மருத்துவமனை

நீலாங்கரை கானல்புரம் சாலை - ஹனுமான் காலனி

பிஎஸ்ஆர் மால் - அண்ணா சத்யாநகர் பிரதான சாலை

கந்தஞ்சாவடி - செக்ரெட்ரியட் காலனி

எஸ்.கொளத்தூர் - மேடவாக்கம் ஜங்ஷன்

ஆர்டிஓ சென்னை ( தெற்கு)

எம்ஜிஆர் சாலை, பாலவாக்கம் - திருவள்ளூர் நகர், நாகத்தம்மான் கோயில்

திருவான்மியூர் ரயில் நிலையம் - நீலாங்கரை பாண்டியன் சாலை

பெருங்குடி கார்ப்பரேஷன் சாலை - வேளச்சேரி ரயில் நிலையம்

உலக வர்த்தக மையம், பெருங்குடி - டி மார்ட் பெருங்குடி

எம்ஜிஆர் சாலை ஜங்ஷன் - உலக வர்த்தக மையம்

ப்ளூ லகூன் பீச் ரிசார்ட் - பாலவாக்கம் அண்ணா சாலை

ஆர்டிஓ சென்னை ( தென்கிழக்கு)

போரூர் இபி - ஆழ்வார் திருநகர் மார்க்கெட்

செட்டியார் அகரம் பிரதான சாலை - ஆழ்வார் திருநகர் ஆவின் பாயிண்ட்

ஆழ்வார் திருநகர் மீனாட்சி நகர் - போரூர் டிஎல்எஃப்

ராமாபுரம் அரசமரம் - ஆழ்வார்திருநகர் மீனாட்சி நகர்

ராமாபுரம் டிஎல்எஃப் - போரூர் டோல்கேட்

செயின்ட் ஜார்ஜ் பள்ளி - காரம்பாக்கம் போலீஸ் பூத்

காரம்பாக்கம் போலீஸ் பூத் - வளசரவாக்கம் கார்ப்பரேஷன்

ராமச்சந்திரா மருத்துவமனை - அஷ்டலட்சுமி நகர் போலீஸ் பூத்

லா மெக் பள்ளி - மீனாட்சி அரசு மருத்துவமனை

ஆர்டிஓ மீனாம்பாக்கம்:

ஆலந்தூர் மெட்ரோ - கத்திப்பாரா

கத்திப்பாரா ஜங்ஷன் ( ஆலந்தூர் மெட்ரோ) - மீனம்பாக்கம் மெட்ரோ

கைவேலி பாலம் - மடிப்பாக்கம் கூட்டு ரோடு

கீழ்க்கட்டளை பேருந்து நிறுத்தம் - குரோம்பேட்டை தாலுகா ஆபீஸ்

ஈச்சங்காடு - மடிப்பாக்கம் பேருந்து நிறுத்தம்

காமாட்சி நினைவு மருத்துவமனை - எம்ஆர்டிஎஸ் வேளச்சேரி

அருள்முருகன் டவர் - மவுலிவாக்கம் பாண்ட்

ஜி.எஸ்.டி சாலை, ஏர்போர்ட் சிக்னல் - லிங்க் சாலை

ஆலந்தூர் மெட்ரோ லிங்க் - ஜோதி தியேட்டர்

பரங்கிமலை ரயில் நிலையம் - ராம்நகர் (மடிப்பாக்கம்)

ஈச்சங்காடு நிலையம் - புழுதிவாக்கம் மெட்ரோ

இந்த வழித்தடங்களில் புதியதாக மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.