மாற்றுத்திறனாளி இளைஞருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கி அவரிடம் அவர் திருமணம் குறித்து மாவட்ட ஆட்சியர் உரையாடிய நிகழ்வுகள் மயிலாடுதுறையில் சுவாரசியத்தை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டமாக உருவாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், ஆட்சியர் லலிதாவிற்கு பிறகு கடந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தின் இரண்டாவது ஆட்சியராக பொறுப்பேற்றார் மகாபாரதி. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற உடனேயே தனது வேலைகளை துவங்க களத்தில் இறங்கினார். நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்து, ஆய்வு மேற்கொண்டு கள நிலவரத்தை தெரிந்து கொண்டார். 


நரிக்குறவர் மாணவர்களுக்கு பல ஆயிரம் செலவில் புத்தகங்கள் வாங்கி தந்த வட்டாட்சியர் - சீர்காழியில் நெகிழ்ச்சி




அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்படும் மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு கண்டு பொதுமக்களின் ஆதரவையும் அன்பையும் பெற்ற ஆட்சியராக மகாபாரதி ஐஏஎஸ் இருந்து வருகிறார். குறிப்பாக விவசாயிகளின் குறைகளை களைவதிலும் அதிகம் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாவது ஆட்சியராக ஏ.பி. மகாபாரதி ஐஏஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டு ஓராண்டு நினைவு பெற்றதை தொடர்ந்து விவசாயிகள் பலர் ஒன்றிணைந்து ஆட்சியருக்கு சால்வை அறிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் தங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி கொடுத்து திறம்பட  ஆட்சியை செய்து வருவதாக ஆட்சியர் மகாபாரதிக்கு விவசாயிகள் புகழாரம் சூட்டினர்.


Minister Anbil Mahesh: வறுமையைக் காரணம் காட்டி பிள்ளைகள் படிப்பை நிறுத்தக்கூடாது: அமைச்சர் அன்பில் மகேஸ் உருக்கம்!




முன்னதாக "உங்களை தேடி உங்கள் ஊரில்"என்ற திட்டத்தின் கீழ் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் மூன்று சக்கர சைக்கிள் கேட்டு மனு கொடுத்திருந்தார். அதனை பரிசீலனை செய்த ஆட்சியர் மகாபாரதி அந்த மாற்றுத்திறனாளி இளைஞருக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று சக்கர மிதிவண்டியை வழங்கினார். அப்போது திருமணம் ஆகி விட்டதா? என அந்த  மாற்றுத்திறனாளி இளைஞரிடம் ஆட்சியர் கேட்க, அவர் வெட்கம் கலந்த புன்னகை முகத்துடன் தனக்கு யாரும் பெண் தரவில்லை என தெரிவித்தார். 


’80 வருடமாக காத்திருந்த மக்கள், பட்டா வழங்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா’ உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக நெகிழ்ச்சி..!




இதனை கேட்ட மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பெண் பார்த்து விடலாமா? என அந்த மாற்றுத்திறனாளி இளைஞரிடம் கேட்டு கலகலப்பாக பேசி, அருகில் இருந்தவரிடம் இவருக்கு ஒரு பெண் பாருங்கள் என கூறினார். இதுபோன்று பொதுமக்களுடன் ஆட்சியர் இணக்கமாக செயல்பட்டு, தொடர் கோரிக்கைகளை நிறைவேற்றி வருவதால் பலதரப்பினரும் ஆட்சியரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


IND Vs ZIM T20: 5 டி20 போட்டிகள்! ஜிம்பாப்வே செல்லும் இந்தியா - எப்போது தெரியுமா?