2024ம் ஆண்டு நடக்கும் கிரிக்கெட் தொடரில் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக கருதப்படுவது டி20 உலகக்கோப்பைத் திருவிழா ஆகும். இந்த திருவிழா வரும் ஜூன் 1ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 29ம் தேதி வரை நடக்கிறது. டி20 உலகக் கோப்பைக்குப் பின்னர் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது.
டி20 உலகக் கோப்பை
முன்னாள் சாம்பியனான மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் சேர்ந்து, 2024ம் ஆண்டிற்கான டி-20 உலகக் கோப்பையை நடத்துகின்றன. ஜுன் 1ம் தேதி தொடங்கி ஜுன் 29ம் தேதி வரையில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. மொத்தமுள்ள 20 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் தலா 5 அணிகள் இடம்பெற்றுள்ளன.
ஜுன் 1ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரையில் மொத்த 40 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து 19ம் தேதி முதல் 24ம் தேதி வரையிலான சூப்பர் 8 சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் நடைபெற உள்ளன. இதையடுத்து 26 மற்றும் 27ம் தேதிகளில் அரையிறுதிப் போட்டிகளும் 29ம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெற உள்ளது.
குழுக்கள்:
ஏ பிரிவு: இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா
பி பிரிவு: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன்
சி பிரிவு: நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பப்புவா நியூ கினியா
டி பிரிவு: தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, நேபாளம்
இந்தியா ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் அட்டவணை
இந்தியா ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ளது. ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
- 1வது டி20 - சனிக்கிழமை, 6 ஜூலை, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் மதியம் 1.00 மணி
- 2வது டி20 - ஞாயிறு, 7 ஜூலை, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் மதியம் 1.00 மணி
- 3வது டி20 - புதன், 10 ஜூலை, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் மாலை 6.00 மணி
- 4வது டி20 - சனிக்கிழமை, 13 ஜூலை, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் மதியம் 1.00 மணி
- 5வது டி20 - ஞாயிறு, 14 ஜூலை, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் மதியம் 1.00 மணி