மயிலாடுதுறை மாவட்டம் ஆதனூர்- குமாரமங்கலம் இடையே கட்டப்பட்டுவரும் கதவணை மற்றும் நரிமுடுக்கு வாய்க்கால் நீரொழிங்கி, தெற்கு ராஜன் வாய்க்கால் நீரொழிங்கி உள்ளிட்ட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆட்சியர் ஆய்வு
தொடர்ந்து திட்ட வரைப்படத்தை கொண்டு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். இக்கதவணையானது 1064 மீட்டர் நீளத்திற்கு, 84 கதவுகளுடன் கட்டப்பட்டு வருகிறது. மேலும் இந்த அணையில் 0.33 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை விரைவில் முடிக்க மாவட்ட ஆட்சியர் நீர்வளத்துறை செயற்பொறியாளருக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, நரிமுடக்கு வாய்க்கால் நீரொழிங்கி கட்டப்பட்டு வருவதையும், தெற்குராஜன் வாய்க்கால் நீரொழிங்கி கட்டப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தார். தெற்கு ராஜன் வாய்க்கால் குறுக்கே நரிமுடுக்கு வாய்க்கால் பிரிவு சுவர் 1700 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டு வருவதையும், பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரத்தினை ஆய்வு செய்தார்.
பரபரப்பு....ஓடும் அரசு பேருந்தில் கழண்டு ஓடிய சக்கரம் - உயிர் தப்பிய பயணிகள்..!
பயன்பெற போகும் 22,633 ஏக்கர் விளைநிலங்கள்
மேலும், விவசாயிகளின் கோரிக்கையின்படி கட்டுமான பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். இப்பணிகள் நிறைவுற்றால் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதியில் 6320 ஏக்கர் விளைநிலங்களும், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் வட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 16313 ஏக்கர் விளைநிலங்களும் பயன்பெறும். மேலும், நிலத்தடி நீர்மட்டம் உயரும் என அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர தலைமைச் செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு; என்ன நடந்தது?
ஆட்சியரிடம் பொதுமக்கள் வைத்த கோரிக்கை
இந்த ஆய்வின்போது நரிமுடக்கு வாய்க்கால் நீரொழிங்கி, தெற்குராஜன் வாய்க்கால் நீரொழிங்கி நீரோழுங்கி கட்டுமான பணிகள் காரணமாக அப்பகுதியில் உள்ள தண்ணீர் டேங்க் இடிக்கப்படும் சூழ்நிலை இருப்பதால் அதற்கு அருகிலேயே வேறொரு தண்ணீர் டேங்க் அமைத்து தர வேண்டும் என ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது அதிகாரிகள் பொதுமக்களிடம் முயற்சி செய்வதாக தெரிவித்தனர். இதனை கேட்ட ஆட்சியர் மகாபாரதி அதிகாரிகளிடம் மக்களின் அடிப்படை வசதிகளில் முக்கியமான குடிநீர், அதனை ஏற்படுத்தி தரவேண்டியது நமது கடமை அதனை முயற்சி செய்யாமல் உடனடியாக செய்து தரவேண்டும்.
PM Modi: "நான் முஸ்லீம்கள் பத்தி பேசல.. அவங்கள பத்தி மட்டும்தான் பேசினேன்" பிரதமர் மோடி ஓபன் டாக்!
முயற்சி எல்லாம் செய்யக்கூடாது, நாம்தான் மக்களுக்கு செய்து தர வேண்டும் எனவும், அதனை எந்த வழியில் செய்ய முடியுமோ அந்த வழியில் விரைவாக செய்து தாருங்கள் என அறிவுறுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு தண்ணீர் டேங்க் அமைத்து தரப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதிபட தெரிவித்து சென்றார். இதை கேட்டு அப்பகுதி மக்கள் ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர். இவ்வாய்வின்போது, நீர்வளத்துறை செயற்பொறியாளர் (சிறப்பு திட்டங்கள்) பாலமுருகன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் மாரிமுத்து, உதவி செயற்பொறியாளர்கள் (சிறப்பு திட்டங்கள்) மருதமுத்து, ஆறுமுகம், கண்ணன், முருகேசன், மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராணி ஆகியோர் உடன் இருந்தனர்.