சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள வந்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை யானை அங்குள்ள பம்புசெட்டில் குதூகலமாக குளிக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தருமபுரம் ஆதீனம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் ஆதீனத்திற்கு சொந்தமான இந்தியா முழுவதும் பல்வேறு கோயில்கள் உள்ளன. அவற்றை தருமபுரம் ஆதீனம் பராமரித்து வருகிறது. மேலும் தற்போது ஆதீன கர்த்தராக இருந்து வரும் தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள், 27 வது குரு மகா சன்னிதானமாக முடி சுட்டப்பட்ட நாள் முதல் ஆதீனத்திற்கு சொந்தமான ஏராளமான கோயில்களை திருப்பணிகள் செய்து குடமுழுக்கு விழாவினை நடத்தி வருகிறார்.
Chennai Super Kings: IPL மெகா ஏலம்.. CSK தக்கவைக்கும் வீரர்கள் யார்? முழு லிஸ்ட் உள்ளே
சிவலோக தியாகராஜர் சுவாமி திருக்கோயில்
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான மிகவும் பிரசித்தி பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சிவலோக தியாகராஜர் சுவாமி திருக்கோயில். இக்கோயில் கும்பாபிஷேக விழா வரும் 23 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று தரிசனம் செய்திட தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள், சொக்கநாதர் பெருமானுடன் குரு லிங்க, சங்கமம் பாதயாத்திரையாக கோயிலுக்கு வந்தடைந்துள்ளார்.
CM Stalin: கலைஞர் நாணயத்தில் இந்தி; ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை? ஏன்- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
ஞானாம்பிகை யானை
இந்நிலையில் இக்கோயிலுக்கு தருமபுரம் ஆதீனத்தை தொடர்ந்து தருமபுரம் மடத்திற்கு கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி புதிதாக வாங்கப்பட்ட ஞானாம்பிகை என்ற யானை கும்பாபிஷேக நிகழ்வு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்துக்கொள்ள ஆச்சாள்புரம் கோயிலுக்கு வந்துள்ளது. அந்த யானை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோயில் நந்தவனம் பகுதியில் பம்புசெடில் தடாகம் அமைத்து நீர் தேக்கி வைத்து, அதில் ஞானாம்பிகை யானையை குளிக்க வைத்துள்ளனர். அந்த தண்ணீரில் குதூகலத்துடன் யானை ஞானாம்பிகை உற்சாக குளியல் போட்டு வருகிறது. இதனை கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டு ரசித்து தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து வருகிறது. தற்போது அதில் ஒர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.