மகளிர் டி20 உலகக் கோப்பை:
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற அக்டோபர் மாதத்தில் வங்காளதேசத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், வங்காளதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சாதாரண சூழ்நிலை காரணமாக அக்டோபரில் அங்கு திட்டமிட்டபடி மகளிர் டி20 உலக கோப்பை தொடரை நடத்த ஐ.சி.சி விரும்பவில்லை என தகவல் வெளியாகி இருந்தது.
இதையடுத்து மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்தியாவில் நடத்த ஐ.சி.சி திட்டமிட்டது. ஆனால், மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியா நடத்த விரும்பவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர்,அடுத்த ஆண்டு, நாங்கள் 50 ஓவர் பெண்கள் உலகக் கோப்பையை நடத்துவோம். தொடர்ந்து உலகக் கோப்பைகளை நடத்த விரும்புகிறோம் என்பதற்கான எந்த சமிக்ஞையையும் நாங்கள் கொடுக்க விரும்பவில்லை,என்று கூறியிருந்தார்.
மழைக்காலம் என்பதால் போட்டியை நடத்த வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறலாம் என கூறப்பட்டது.
ஜிம்பாப்வே திட்டம்:
இந்நிலையில், மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இரண்டு நாடுகளும் தற்போது ரேஸில் இருக்கிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 3 முதல் 20 வரை நடைபெறுகிறது. ஜிம்பாப்வே 2026 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியாவுடன் இணைந்து 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை நடத்துகிறது குறிப்பிடத்தக்கது.