மயிலாடுதுறை அருகே ஒரே இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு வந்த மூன்று கல்லூரி மாணவர்கள் மீது எதிரே வந்த மினி லாரியில் மோதிய விபத்தில் வாகனத்தை ஓட்டி வந்த கல்லூரி மாணவன் உயிரிழந்த நிலையில் பின்னால் அமர்ந்து வந்த இரு மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர்த்தப்பியுள்ளனர்.
கல்லூரிக்கு வந்த மாணவர்கள்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மன்னம்பந்தல் ஏவிசி தனியார் பாலிடெக்னிக், இன்ஜினியரிங் , ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் இன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் கல்விபயின்று வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவ கிராமம் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஏகமூர்த்தி என்பவரின் 18 வயதான மகன் வினோத் (டிப்ளமோ மெக்கானிக்கல் மூன்றாம் ஆண்டு) படித்து வரும் மாணவன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த அதே கல்லூரியில் படிக்கும் 18 வயதான ஜெகதன் மற்றும் மூவலூர் ஏழுமலையான் ஐடிஐயில் படிக்கும் 18 வயதான மாணவன் ஜெகதீஷ் ஆகிய மூவரும் (ஸ்கூட்டி மாடல்) ஓர் இருசக்கர வாகனத்தில் பூம்புகார் சாலை வழியாக மன்னம்பந்தல் கல்லூரிக்கு வந்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்கள்
அப்போது அவர்கள் மணக்குடி என்ற பகுதியில் வந்த போது முன்னே சென்ற காரை முந்தி செல்ல முயன்றுள்ளனர். அந்த சமயத்தில் எதிரே வந்த ஈச்சர் மினிலாரியில் இருச்சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தை ஓட்டி வந்த மாணவன் வினோத் மினி லாரியின் முன்பக்கத்தில் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த ஜெகதன், ஜெகதீஷ் ஆகிய இருவரும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர்த்தப்பினர்.
வீட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட தம்பி! சைவ பிரியரான அண்ணன் தற்கொலை! - சென்னையில் சோக சம்பவம்!
காவல்துறையினர் விசாரணை
தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த செம்பனார்கோயில் காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்த மாணவன் வினோத்தின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த மாணவன் வினோத்தின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தலையில் அடித்துக் கொண்டும், தரையில் உருண்டு பிரண்டும் கதறி அழுதது அனைவரையுமே சோகத்தில் ஆழ்த்தியது. மேலும், ஈச்சர் மினி லாரியை ஒட்டி வந்த திண்டுக்கல் பகுதி சேர்ந்த 28 வயதான விஜயன் என்பவரையும், மினி லாரியையும் காவல்துறையினர் செம்பனார்கோவில் காவல் நிலையம் கொண்டு சென்று விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைக்கவசம் அணியாமல் இருந்ததே உயிரிழப்பிற்கு ஏற்பட்டிருக்காது என காவல்துறை தெரிவித்துள்ளனர்.
தலைகவசத்தின் முக்கியத்துவம்
மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இதுபோன்று மாணவர்களுக்கு பெற்றோர் இருசக்கர வாகனங்களை வாங்கி கொண்டும் முன்பு அவர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி, குறைந்த பட்சம் கண்டிப்பாக தலைகவசம் அணிந்து வாகன ஓட்ட அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் விட்டு விட்டு பின்னர் ஏற்படும் பேரிழப்பு குறித்து கவலைபட்டு எந்த பயனும் இல்லை எனவும், ஒவ்வொரு பெற்றோர்களும் இதனை நன்கு உணரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.