மயிலாடுதுறை அருகே பொறையாரில் செயல்பட்டு வரும் கல்லூரிக்கு அக்கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைத்து 38 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக வகுப்பறைகளை கட்டி கொடுத்துள்ளனர்.
மறக்க முடியாத கல்வி கூடங்கள்
ஒவ்வொரு மனிதனுக்கும் பள்ளி கல்லூரி வாழ்க்கை என்பது அவர்களின் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு இடம். அங்கு அவர்களுக்கு பல்வேறு அனுபவங்கள் இருந்தாலும், கல்விக்கூடங்களில் கற்றுத் தரும் பாடங்கள் மூலம் கற்றுத் தேர்ந்து, ஐஏஎஸ், ஐபிஎஸ், மருத்துவர், பொறியாளர், ஆசிரியர், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பல்வேறு உயர் இடத்திற்கு செல்ல விதை விதைத்த இடம் இந்த பாடசாலைகள் தான்.
Watch Video: அடுத்தடுத்து 5 சிக்ஸர்கள்! ரஷீத்கானை பொளந்து கட்டிய பொல்லார்ட் - நீங்களே பாருங்க
உதவும் முன்னாள் மாணவர்கள்
அதனால் என்னவோ அதன் மீது உள்ள ஈர்ப்பும், பற்றும் ஆண்டுகள் பல கடந்தாலும் அங்கு பயின்ற மாணவர்களுக்கு விட்டுப் போவதில்லை, அதன் காரணமாக தான் பயின்ற கல்விக் கூடங்களை மேலும் உயர்த்தி பார்த்து, அதன் மூலம் எதிர்கால சந்ததியினரை வளமாக்க வேண்டும் என்பதே அங்கு பயின்ற முன்னாள் மாணவர்களின் எண்ணமாக இருந்து வருகிறது.
அதற்காக அவர்கள் ஒன்றிணைந்து, பொருளுதவி , உதவி பண உதவி என அவர்களால் முடிந்த அனைத்து பங்களிப்பையும் அளித்து வருகின்றனர். அதுபோன்ற ஒர் நிகழ்வு தான் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
TN GOVT Age Limit: அடடே..! அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த முடிவு? - தமிழக அரசு விளக்கம்
ரூ.38 லட்சத்தில் புதிய வகுப்பறைகள்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த பொறையாரில் செயல்பட்டு வருகிறது டி.பி.எம்.எல் தனியார் கல்லூரி. 1972-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இக்கல்லூரியில், 1974- ஆம் ஆண்டுமுதல் இயற்பியல் துறை செயல்பட்டு வருகிறது. இத்துறையில் 1980 முதல் 2000 வரை 20 ஆண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கல்லூரிக்கு தொடர்ச்சியாக தங்களால் இயன்ற பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர்.
திறப்பு விழா
கல்லூரிக்கு சோலார் மின் வசதி, கல்லூரியில் குறுங்காடுகள், உள்ளிட்டவற்றை முன்னதாக ஏற்படுத்தித் தந்த இந்த முன்னாள் மாணவர்கள், இதன் முத்தாய்ப்பாக "பிஸிமீட்" அமைப்பின் மூலமாக ஒன்றிணைந்து தாங்கள் பயின்ற துறைக்கு தரைத்தளத்தில் மட்டும் செயல்பட்டு வந்த கட்டடத்தை ரூ.38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இளங்கலை பிரிவுக்கு 3 வகுப்புகளும், முதுகலை பிரிவுக்கு இரண்டு வகுப்புகள் என மொத்தம் ஐந்து வகுப்பறை கட்டடங்கள் உடன் முதலாம் தளத்தில் உயர்த்தி 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேல் தளம் கட்டி வழங்கி உள்ளனர்.
அதற்கான துவக்க நிகழ்ச்சி டிஎல்எல்சி பிஷப் கிறிஸ்டியன் சாம்ராஜ் தலைமையில் நடைபெற்று. திறப்பு விழாவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கலந்து கொண்டு வகுப்பறை கட்டிடங்களை ரிப்பன் வெட்டி இந்நாள் மாணவர்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். முன்னாள் மாணவர்களின் இந்த செயல் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.
Pregnancy Adivce: பெண்கள் கவனத்திற்கு..! கர்ப்ப காலத்தில் முன்கூட்டியே உடைவது எவ்வளவு ஆபத்தானது?