புத்தகப் பிரியர்களுக்கு குட் நியூஸ் - என்ன தெரியுமா?
மயிலாடுதுறையில் மூன்றாவது புத்தகத் திருவிழா வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 3 ஆவது புத்தகத் திருவிழா வருகின்ற ஜனவரி 31 -ஆம் தேதி முதல் பிப்ரவரி 10 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி புத்தகத் திருவிழா இலச்சினையை வெளியிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர்
இலச்சினை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் கூறுகையில், நமது மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பாக மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம், தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் 3 ஆவது புத்தகத் திருவிழா எதிர்வரும் ஜனவரி 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் பிப்ரவரி 10 ஆம் தேதி திங்கட்கிழமை வரை மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.
கூட்டமாக சைக்கிளிங் சென்ற சென்ற அஞ்சலக ஊழியர்கள் - வியர்ந்து பார்த்த பொதுமக்கள்...!

பல்வேறு நிகழ்வுகள்
இப்புத்தகத்திருவிழாவில் தமிழகத்தின் முன்னனி பதிப்பகங்களின் 70 புத்தக விற்பனை அரங்குகள், அரசு துறைகளின் திட்டவிளக்க கண்காட்சி அரங்குகள், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள், அறிவியல் கோலரங்கம் இடம்பெற உள்ளது. இப்புத்தகத்திருவிழாவில் புகழ்பெற்ற 20 பேச்சாளர்களின் சொற்பொழிவுகளும், பட்டிமன்றம், நாடகம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளும், கிராமியகலைக்குழுவினர்களின் நாட்டுபுற கலைநிகழ்ச்சிகளும், உணவுத் திருவிழாவும் நடைபெற உள்ளது.
TVK District Secretary: வெள்ளி நாணயம் கொடுத்த விஜய்.! 120 தவெக மாவட்ட நிர்வாகிகள் நியமனம்
ஆட்சியர் வேண்டுகோள்
மேலும் பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்பெறும் வகையில் இப்புத்கத்திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. இப்புத்தகத்திருவிழாவிற்கு அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.
Maruti Cars Price Hike: பிப்ரவரி முதல் அதிகரிக்கும் மாருதி சுசூகி கார்களின் விலை - விவரம் இதோ!