கூட்டமாக சைக்கிளிங் சென்ற சென்ற அஞ்சலக ஊழியர்கள் - வியர்ந்து பார்த்த பொதுமக்கள்...!
உடற்பயிற்சியின் அவசியம் குறித்து தினந்தோறும் அரை மணி நேரம் உடற்பயிற்சி என்ற பதாகைகளுடன் மிதிவண்டியில் பேரணியாக சென்று அஞ்சலக ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மயிலாடுதுறையில் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து தினந்தோறும் அரை மணி நேரம் உடற்பயிற்சி என்ற பதாகைகளுடன் மிதிவண்டியில் பேரணியாக சென்று அஞ்சலக ஊழியர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாடுமுழுவதும் பிரச்சாரம்
நாடு முழுவதும் அஞ்சல் துறை சார்பில் அரை மணி நேரம் உடற்பயிற்சி அவசியம் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பசுமையான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கவும், உடற்பயிற்சியை தினசரி அங்கமாக உருவாக்கவும் மத்திய அரசு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. மேலும், தினம்தோறும் அரை மணி நேரம் உடற்பயிற்சி என்ற விழிப்புணர்வை நாடு முழுவதும் பரப்பும் விதமாக பல வகையான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மயிலாடுதுறையில் சைக்கிள் பிரச்சாரம்
இதன் தொடர்ச்சியாக, மத்திய மண்டலத்தின் கீழ் உள்ள ஸ்ரீரங்கம், கரூர், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, கடலூர் அஞ்சல் கோட்டங்களில் உள்ள தபால்காரர்கள் மூலம் பொது மக்களுக்கு உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நிகழ்ச்சி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று மிதிவண்டி விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் நடைபெற்றது.
Seeman: சிக்கலில் சீமான்! கொத்தாக தி.மு.க.வுக்கு ஜம்ப் அடித்த 3000 தம்பிகள்! அடி மேல் அடி
தலைமை தபால் நிலையத்தில் துவங்கிய பிரச்சாரம்
அஞ்சலக ஊழியர்களின் உடல்நலம் கருதியும், பொது மக்களின் உடல் நலம் கருதியும் தினந்தோறும் அரை மணி நேரம் மிதிவண்டியில் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தில் இருந்து அஞ்சலக ஊழியர்கள் கையில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி இருசக்கர மிதிவண்டியில் நகர்வலம் வந்தனர். உடற்பயிற்சி விழிப்புணர்வு மிதிவண்டி நகர்வளத்தை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆஷிப் இக்பால் கொடி அசைத்து துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் அஞ்சலக ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Raj Kiran : ”புகைப்படத்தை வச்சு ஏமாத்துவாங்க!” சீமான் மீது மறைமுக தாக்கு? ராஜ்கிரணின் பகீர் பதிவு