தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 120 மாவட்டங்களாக பிரித்து, தவெக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், முதற்கட்டமாக 19 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாவட்ட செயலாளர், ஒரு மாவட்ட பொருளாளர், ஒரு இணை செயலாளர், 2 துணை செயலாளர் என்ற அடிப்படையில் நிர்வாகிகள் 5 முக்கிய பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகின்றனர். இக்கூட்டத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு , விஜய் உருவம் கொண்ட, வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது.






தவெக நேர்காணல்





தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகளை நியமிக்கும் வகையில், இன்று தவெக தலைவர் விஜய் தலைமையில், பனையூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி உள்ளிட்ட முக்கிய பொறுப்பு வகிப்பவர்களை வெளியே அனுப்பிவிட்டு, மாவட்ட நிர்வாகிகளுடன், தனித்தனியாக ஆலோசனை நடத்தியிருக்கிறார், கட்சியின் தலைவர் விஜய். ஒவ்வொரு நிர்வாகிகளிடம் சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஆலோசனை நடத்தியிருக்கிறார். 


மாவட்ட நிர்வாகிகளிடம், கட்சியை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள், கட்சியின் செயல்பாடு எப்படி இருக்கிறது, எப்படி செயல்பட வேண்டும், கட்சியை வலுப்படுத்த என்ன திட்டங்கள் இருக்கிறது என்பது குறித்த ஆலோசனைகளை, மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் தெரிவிக்கின்றன. 






நிர்வாகிகள் நியமனம்:


இந்நிலையில், தவெக சிறப்பாக செயல்படும் வகையிலும், அனைத்து பகுதிகளிலும் கட்சியை வலுப்படுத்தும் வகையிலும்,தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளை 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருப்பதாக தவெக தெரிவித்துள்ளது. அங்கு, ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாவட்ட செயலாளர், ஒரு மாவட்ட பொருளாளர், ஒரு இணை செயலாளர், 2 துணை செயலாளர் என்ற அடிப்படையில் நிர்வாகிகள் 5 முக்கிய பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகின்றனர். மேலும் ஒரு மாவட்டத்திற்கு 10 நியமன உறுப்பினர்களும் நியக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன.



கரூர் மேற்கு மாவட்ட செயலாளராக வி.பி. மதியழகன், கோவை மாநகர் மாவட்ட செயலாளராக வி.சம்பத்குமார் அரியலூர்-சிவகுமார், ஈரோடு மாநகர்-பாலாஜி, கள்ளக்குறிச்சி-பரணி பாலாஜி, சேலம் மத்திய மாவட்டம்-பார்த்திபன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  மேலும், புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு , விஜய் உருவம் கொண்ட, வெள்ளி நாணயமும் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. 


ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் - விஜய்


இந்நிலையில், தவெக தலைவர் விஜய் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இல்லாமல், மாவட்ட நிர்வாகிகளை முதல்முறையாக தனித்தனியாக  சந்தித்து, நேரகாணல் செய்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்நிலையில், முதற்கட்டமாக 19 மாவட்ட நிர்வாகிகள் நியமனம் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இதுகுறித்து, தவெக தலைவர் விஜய் தெரிவித்ததாவது, “ தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, கழகப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள, கழகமானது அமைப்பு ரீதியாக, சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என விஜய் தெரிவித்துள்ளார்.