மயிலாடுதுறை அருகே மின்கம்பத்தில் இன்சுலேட்டர் பீங்கானுக்கு பதிலாக மதுபாட்டில் கொண்டு மின்கம்பி கட்டப்பட்டிருந்தது குறித்து ஏபிபி நாடு செய்தி வெளியிட்டதை தொடர்ந்து அது சரி செய்யப்பட்டுள்ளது‌.


தமிழகத்தில் சமீப நாட்களாக ஆங்காங்கே, இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை வைத்திருக்கும்போதே, அதனை நடுவில் வைத்து புதிதாக சாலைகள் போடப்பட்டது. அடிபம்பை அகற்றி மாற்று இடத்தில் அமைக்காமல் சாலை போட்டுவது, மின்கம்பத்தை சாலையோரத்தில் மாற்றி நடாமல் சாலையின் நடுவில் வைத்து புதிய சாலை அமைப்பது தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார்.  


Budget Bikes: மலிவு விலையில் சிறந்த செயல்திறன் கொண்ட பைக்குகள் - இந்தியாவின் டாப் 5 லிஸ்ட் இதோ..!




இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டத்திலும் மின்கம்பிகள் ஒன்றோடொன்று ஒன்று இணைக்காமல் இருக்க மூங்கில் முள்குச்சியை வைத்து கட்டிய நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியது. அது அப்போது ஏபிபி நாடு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து அதனை மின்வாரிய ஊழியர்கள் சரி செய்தனர். இந்நிலையில் மீண்டும் அதேபோன்று சம்பவம் ஒன்று மீண்டும் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்தேறி உள்ளது. 


‌Manarkeni: இனி இணையத்திலும் மணற்கேணி செயலி; போட்டித் தேர்வுகளுக்கு காணொலிகள், விளக்கப் பாடங்கள்- பயன்படுத்துவது எப்படி?




மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மாதிரிமங்கலம் ஆற்றங்கரை பகுதியில் உள்ள விவசாய வாயலுக்கு விவசாய பயன்பாட்டிற்கு பயன்படும் பேர்வெலுக்கு மின்சாரம் செல்லும் மின்கம்பம் அமைந்துள்ளது. அந்த மின்கம்பம் ஒன்றில் மின்கம்பிகளை மின்கம்பத்தில் கட்டப்பட்ட கூடிய இன்சுலேட்டர் என்று சொல்லக்கூடிய பீங்கான் உடைந்து மின்சாரம் தடைப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் அதனை அப்பகுதி மின் ஊழியர் அதனை இன்சுலேட்டர் பீங்கான் கொண்டு சரி செய்யமால் பீங்கானுக்கு மாற்றாக மது பாட்டிலை வைத்து சரிசெய்துள்ளனர். 


Road Raja Campaign: நீங்க ரோடு ராஜாவா? ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு அபராதம்.. அதிரடி காட்டும் போக்குவரத்து காவல்துறை..




இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர். இதுதொடர்பாக மின்வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அதனை அதிகாரிகள் பொருட்படுத்தாமல் இருந்ததை அடுத்து, இதுகுறித்து ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திடம் முறையிட்டனர். அதனை அடுத்து இதுகுறித்து ஏபிபி நாடு செய்தி வெளியிட்டது. அந்த செய்தி எதிரொலியாக செய்தி வெளியான சில மணி நேரங்களில் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மதுபாட்டிலை அகற்றி விட்டு இன்சுலேட்டர் பீங்கானை வைத்து சரி செய்தனர். இதனை அடுத்து அப்பகுதி விவசாயிகள் ஏபிபி நாடு செய்தியால் அதிகாரிகள் உடனடியாக சரி செய்து கொடுத்துள்ளனர் என கூறி நன்றி தெரிவித்தனர்.


Shaitaan Trailer: தரமான ஹாரர் படம் ரெடி! அசத்தும் மாதவன், ஜோதிகா: ஷைத்தான் ட்ரெய்லர் வெளியீடு!