Top 5 most affordable bikes: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மலிவு விலையில் கிடைக்கும், டாப் 5 மோட்டார் சைக்கிள் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 


மலிவு விலை மோட்டார்சைக்கிள்:


மலிவு விலை, முரட்டுத்தனமான கம்யூட்டர் மோட்டார்சைக்கிள் மாடல்கள் தான்,  இந்தியாவில் நடைபெறும் மொத்த இரு சக்கர வாகன விற்பனையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளன. இந்நிலையில் தான் ஹோண்டா நிறுவனம் 100சிசி கம்யூட்டர் பிரிவில் தனது முதல் வாகனமாக ஷைன் 100 மாடல் இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதைதொடர்ந்து, தற்போது இந்திய சந்தையில் மலிவு விலையில், அதிக செயல்திறனுடன் கிடைக்கக் கூடிய டாப் 5 பைக்குகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


5. பஜாஜ் பிளாட்டினா 100:


பிளாட்டினா 100 என்பது பஜாஜின் மிகவும் மலிவு விலை மாடல் என்பதோடு, இந்திய சந்தையில் கிடைக்கும் மலிவு விலை மோட்டார் சைக்கிள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. பஜாஜின் சிக்னேச்சர் டிடிஎஸ்-ஐ தொழில்நுட்பம் கொண்ட 102சிசி இன்ஜினை இந்த வாகனம் கொண்டுள்ளது. மேலும் ஃப்யூவல்-இன்ஜெக்ஷனைப் பெறாத ஒரே பைக் இதுதான்.  அதற்கு மாற்றாக பஜாஜின் இ-கார்பைப் பயன்படுத்துகிறது. மோட்டார் 7.9hp மற்றும் 8.3Nm உற்பத்தி செய்கிறது. இந்த பிரிவில் பிளாட்டினாவின் தனித்துவமான அம்சம் அதன் LED DRL ஆகும். இதன் விலை சந்தையில் ரூ.67,808 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


4. ஹோண்டா ஷைன் 100:


இந்த மலிவு விலை பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்து இருப்பது, அண்மையில் அறிமுகமான ஹோண்டா ஷைன் 100 . இது ஒரு ஆட்டோ சோக் சிஸ்டம் மற்றும் பக்கவாட்டு இன்ஜின் கட்-ஆஃப் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இந்த பட்டியலில் OBD-2A இணக்கமான மற்றும் E20 இணக்கமான ஒரே மோட்டார் சைக்கிள் இதுவாகும். 7.61hp, 8.05Nm ஆற்றலை வெளிப்படுத்தும் 99.7cc இன்ஜின் மின்சார ஸ்டார்ட்டரைக் கொண்டுள்ளது. இது நாட்டிலேயே மிகவும் மலிவானசெல்ஃப் ஸ்டார்ட் மோட்டார்சைக்கிள் ஆகும். இதன் விலை ரூ.64,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


3. டிவிஎஸ் ஸ்போர்ட்


டிவிஎஸ் ஸ்போர்ட் மாடலில் உள்ள 109.7சிசி இன்ஜின் இந்த பட்டியலில் உள்ள மற்ற பைக்குகளை விட சற்று உயர்ந்த பிரிவில் இடம் பெற்றாலும், இது நாட்டின் மூன்றாவது மிகவும் மலிவான மோட்டார்சைக்கிள் ஆகும்.  இதன் பேஸ் மாடல் கிக் ஸ்டார்ட்டருடன் வர, செல்ஃப் ஸ்டார்ட் கொண்ட டாப் ஸ்பெக் மாடலின் விலை ரூ.69,873 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இது 8.3hp மற்றும் 8.7Nm ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இந்த மாடலின் விலை ரூ.61,500 தொடங்கி ரூ.69,873 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


2. ஹீரோ எச்எஃப் டீலக்ஸ்:


100cc பிரிவுக்கான சந்தையில் தொடர்ந்து முன்னணியில் இருப்பது Hero MotoCorp ஆகும். இந்த வெற்றிக்கு உதவும் பைக்குகளில் ஒன்று பிரபலமான HF டீலக்ஸ் ஆகும். இதில், பழம்பெரும் 97சிசி 'ஸ்லோப்பர்' இன்ஜின் இடம்பெற்றுள்ளது.  ஹீரோவின் i3S ஸ்டாப்-ஸ்டார்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் ஸ்போர்ட்டைப் போலவே, பேஸ் வேரியண்டுகளும் கிக் ஸ்டார்டர்களைப் பெறுகின்றன. அதே நேரத்தில் உயர் பதிப்புகள் எலக்ட்ரிக் ஸ்டார்ட்டரைக் கொண்டுள்ளன. இதன் விலை ரூ. 59,998 தொடங்கி ரூ. 68,768 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


1. ஹீரோ எச்எஃப் 100


Hero HF 100 தற்போது இந்தியாவில் விற்பனையில் உள்ள மிகவும் மலிவு விலை மோட்டார் சைக்கிள் ஆகும். இது HF டீலக்ஸில் உள்ள 8hp மற்றும் 8.05Nm செய்யும் ஆற்றலை உற்பத்தி செய்யும் அதே 97cc இன்ஜினைக் கொண்டுள்ளது. ஆனால் i3S ஸ்டாப்-ஸ்டார்ட் தொழில்நுட்பம் இல்லை. இது கிக்-ஸ்டார்ட்டருடன் ஒரே ஒரு மாறுபாட்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.59,068 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


இந்தப் பட்டியலில் எவர்க்ரீன் ஹீரோ ஸ்ப்ளெண்டர் விடுபட்டதைக் கண்டு ஆச்சரியப்பட வேண்டாம்.  ரூ.75,141ல் தொடங்கி ரூ.79,991 வரை விற்பனை செய்யப்படும் இந்த வாகனம்,  உண்மையில் இந்தியாவில் தற்போது கிடைக்கும் 100சிசி கம்யூட்டர்களில் விலையுயர்ந்தது ஆகும்.


Car loan Information:

Calculate Car Loan EMI