உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு பழனியில்  தேனீ வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. உடல் முழுவதும் தேனீக்களை இளைஞர் பரவவிட்டு விவசாயிகளிடம் தேனீக்கள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்.


IPL 2023, DC vs CSK: சிஎஸ்கேவின் பிளே ஆஃப் கனவு.. டெல்லி அணியுடன் இன்று மோதல்.. வரலாறு சொல்வது என்ன?




சுறுசுறுப்புக்கு பெயர் பெற்றவை தேனீக்கள். ஆண்டுதோறும் மே மாதம் 20 ஆம் தேதி சர்வதேச தேனீக்கள் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பூக்கும் தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்கள் உதவுவதால் காய்களின் விளைச்சல் அதிகரிக்கிறது. தேனீக்களை விவசாயிகளின் நண்பன் என்றும் அழைக்கின்றனர். தற்போது விவசாயிகள் தேனீ வளர்ப்பில் ஈடுபடுவதால் நல்ல லாபமும் கிடைக்க துவங்கியுள்ளது. பழனி அருகே எரமநாயக்கன்பட்டி கிராமத்தில் தனியார் தோட்டத்தில் பட்டதாரி இளைஞரான இசாக் என்பவர் தேனீக்கள் வளர்ப்பு பண்ணை அமைத்து கடந்த எட்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார். தேனீ வளர்ப்பாளரான இசாக் தனது முகம் மற்றும் உடலில் தேனீக்களை பரவவிட்டு தேனீக்கள் குறித்து விழிப்புணர்வை விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடத்தில் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.


Karnataka CM Swearing-In Ceremony LIVE: கர்நாடகாவில் இன்று அமைச்சர்களாக பதவியேற்பவர்களின் விவரம்..!




பின்னர் தேனீக்களின் சேவை மனிதனுக்குத் தேவை. தேனீக்கள் அழிந்துவிட்டால் மனித இனமும் அழிந்து விடும். மரங்களை வளர்ப்போம் இயற்கையைக் காப்போம் என்று கூறிய இளைஞர், விளைச்சல் அதிகரிக்க அனைத்து விவசாயிகளும் தேனீ வளர்ப்பை கற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். தேனீக்கள் மனிதனைத் தாக்கும், கொட்டி காயப்படுத்தும் என்று விவசாயிகள் அச்சப்படுகின்றனர். விவசாயிகளின் அச்சத்தை போக்கவே தனது முகம் மற்றும் உடலில் தேனீக்களை பரவ விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழக அரசு தோட்டக்கலை துறை மூலமாக சர்வதேச தேனீக்கள் தினத்தை கொண்டாட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


Chennai Airport: விமானத்தில் பயணி ஒருவருக்கு நெஞ்சுவலி ;அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் - நடந்தது என்ன?




Vadivelu Songs : போடா போடா புண்ணாக்கு முதல் ராசாகண்ணு வரை.. வடிவேலு பாடிய பாடல்கள்


தேனீக்கள் வளர்ப்பின் மூலமாக தேன் மட்டும் கிடைக்கிறது. மேலும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான தேனீக்கள் மூலப் பெறப்படும் மெழுகு பயன்படுத்தி மெழுகுவர்த்தி தயாரித்து விற்பனை செய்யலாம், மகரந்த தூள்களை சேகரித்து விற்பனை செய்யலாம். தேன் மூலம் சோப்பு தயாரித்து மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தலாம் இதனால் கூடுதலான லாபம் கிடைக்கும் எனவும் தேனீ வளர்ப்பார்கள் தெரிவித்தனர்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண