மாமன்னன் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வடிவேலு பாடிய ராசாகண்ணு பாடல் இன்று வெளியாகியுள்ளது. கண்கலங்கிய நிலையில் வடிவேலு பாடிய இந்த பாடல் யுகபாரதியின் வரிகளில் வலி நிறைந்த மக்களின் கதையை எடுத்துரைக்கிறது. இந்தப் பாடலின் மூலம் வடிவேலு மாறுபட்ட ஒரு நடிகர் மட்டுமில்லாமல் மாறுபட்ட பாடகர் என்பதும் மற்றுமொரு முறை நிரூபணமாகியுள்ளது. வடிவேலு பாடி ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருக்கும். அவரது பாடல்களை ஒரு ரீ-விசிட் செய்வோம்.


போடா போடா புண்ணாக்கு..


என் ராசாவின் மனசிலே என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான வடிவேலு அந்த படத்தில் இடம்பெற்ற போடா போடா புண்ணாக்கு என்கிற பாடலையும் பாடியிருந்தார். இந்தப் பாடலின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் வடிவேலு


வாடி பொட்ட புள்ள வெளியே..


வடிவேலு பாடி பட்டி தொட்டி எல்லாம் ட்ரெண்ட் ஆகிய ஒரு பாட்டு என்றால் வாடி பொட்ட புள்ள வெளியே. பொட்ட புள்ள என்று சொல்வதாலயோ என்னவோ இந்தப் பாடலுக்கு பெண் ரசிகர்கள் அதிகம். ஒவ்வொரு கல்லூரி  விழாக்களிலும் நிச்சயம் இடம்பெற்றிருக்கும் பாடல்.


சந்தன மல்லிகையில்


வடிவேல் ஒரு நல்ல உணர்வுப்பூர்வமான பாடகர் என்பதற்கான நல்ல ஒரு சான்று இந்த அம்மன் படப் பாடல்.


ஒப்புறானே ஒப்புறானே


திமிரு படத்தில் இந்தப் பாடல் ரசிகர்களுக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டராக பயண்படும் பாடல்களில் ஒன்று.


அப்பத்தா


திரைப்படங்களில் வடிவேலு நடிக்காமல் இருந்த காலங்களில் ரசிகர்கள் அவரது நடிப்பை மட்டும் இல்லை அவரது குரலையும் மிஸ் செய்தார்கள். அந்த குறையைத் தீர்க்கும் வகையில் வடிவேலு நடிப்பில் வெளியான நாய் சேகர் ரிடர்ன்ஸ் திரைப்படத்தில் அப்பத்தா என்கிறப் பாடலை பாடியிருந்தார் வடிவேலு . எதிர்பார்த்த அளவு படம் வெற்றியடையவில்லை என்றாலும் இந்தப் பாடல் பெருமளவு ரீச் ஆனது.


ராசாகண்ணு


தற்போது மாமன்னன் படத்தில் ராசாகண்ணு என்கிற பாடலை வடிவேலு பாடியுள்ளார்.வடிவேலு ஒரு தேர்ந்த கிராமிய பாடகர் என்பதை நாம் அறிவோம் ஆனால் ஓரிரு தொலைகாட்சி நிகழ்ச்சிகளைத் தவிர இத்தனை காலம் ஒரு முழு கிராமியப் பாடலை அவர் பாடி கேட்டதில்லை. தற்போது ஏ. ஆர். ரஹ்மான் இசையில் அமைந்திருக்கும் இந்தப் பாடல் முழுமையான ஒரு நாட்டார் பாடலாக அமைந்துள்ளது.


மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு , ஃபஹத் பாசில் ஆகியவர்கள் நடித்திருக்கும் படம் மாமன்னன். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வரும் மே மாதம் மாமன்னன் திரைப்படம் திரையரங்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.விரைவில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.