மதுரை தெற்கு வாசல் சப்பாணி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவரது மகள் வர்ஷா(19). கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி காதலித்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
வர்ஷா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி மதுரை கீரைத்துறை பகுதியை சேர்ந்த பழனி என்பவரை காதலித்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். வர்ஷாவும் பழனியும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வர்ஷாவுக்கும் பழனிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வர்ஷா தனது தாய் வீட்டிற்கு மீண்டும் வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று தனது வீடு அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது ஹெல்மெட் அணிந்த அடையாளம் தெரியாத நபரால் பட்டப்பகலில், கத்தியால் குத்தப்பட்டு பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு வாசல் போலீசார் வர்ஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் பழனியிடம் விசாரணை மேற்கொள்ள பழனியை தேடி வருகின்றனர். இந்நிலையில் பழனி கீரைத்துறை காவல்நிலையத்தில் சரண்டர் ஆகியுள்ளர் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Rain : மதுரையில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை - குளிர்ச்சியால் மக்கள் மகிழ்ச்சி..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்