பழனி முருகன் கோவிலில், தைப்பூச திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று வெள்ளிக்கிழமை திருக்கல்யாணம், நாளை சனிக்கிழமை தைப்பூச தேரோட்டம் நடைபெறுகிறது.
பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை - பக்தர்களே வசூல் எவ்வளவு தெரியுமா..?
இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள், தரிசனம் முடிந்து ஊருக்கு செல்லும் போது பழனிக்கு பெயர்போன பஞ்சாமிர்தத்தை தவறாமல் வாங்கி செல்கின்றனர்.
இதேபோல் காவடி எடுத்து வரும் பல்வேறு குழுவினர் தாங்களாகவே பஞ்சாமிர்தம் தயாரிக்கின்றனர். இதற்கு மலைவாழைப்பழம், பூவன், கற்பூரவள்ளி உள்ளிட்ட பழங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக மலைவாழைப் பழங்களே பஞ்சாமிர்தத்துக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. பஞ்சாமிர்தத்துக்கு பயன்படுத்தும் மலைவாழைப்பழங்கள், தற்போது பழனி பகுதிக்கு அதிக அளவு வரத்தாகி உள்ளது.
Madurai Rain : மதுரையில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை - குளிர்ச்சியால் மக்கள் மகிழ்ச்சி..!
குறிப்பாக அடிவார பகுதிகளில் கடைக்காரர்கள், மலை வாழைப்பழங்களை வாங்கி விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர். பழனி மேற்கு கிரிவீதி, அய்யம்புள்ளி ரோடு, பாலசமுத்திரம் ரோடு ஆகிய இடங்களில் உள்ள சாலையோர கடைகளிலும் மலைவாழைப்பழ விற்பனை சூடு பிடித்துள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, "தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு வருகை தரும் பக்தர்கள் பஞ்சாமிர்தத்தோடு மலைவாழைப்பழங்களையும் வாங்கி செல்கின்றனர். இதனால் சிறுமலை, ஆடலூர், பன்றிமலை, கொடைக்கானல் மற்றும் கர்நாடகா பகுதிகளில் இருந்து மலைவாழைப்பழங்கள் வரத்தாகி உள்ளன. அந்த வகையில் சுமார் 30 டன் வாழைப்பழங்கள் வந்துள்ளன. தரத்தை பொறுத்து ஒரு பழம் ரூ.7 முதல் ரூ.10 வரை விற்பனை ஆகிறது. இதனை, பக்தர்கள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்