செல்ஃபி எடுக்கும்போது மாயம் - பள்ளத்தாக்கிலிருந்து அழுகிய நிலையில் இளைஞர் உடல் கண்டுபிடிப்பு

இளைஞ‌ரின் ச‌ட்டை க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்ட‌ 1400 அடி ப‌ள்ள‌த்தாக்கின் சுற்றுவ‌ட்டார‌ பகுதியில் தேடும் பணி மீட்புக்குழுவின‌ரால் முடுக்கிவிடப்பட்டது.

Continues below advertisement

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதி அருகே வனத்துறையினரால் தடை செய்யப்பட்ட ரெட் ராக் பகுதிக்கு மதுரையை சேர்ந்த ராம்குமார்(32) என்ற இளைஞர் கடந்த இரண்டாம் தேதி சென்றார். அப்போது பாறையின் நுனி பகுதியில் நின்றுகொண்டு செல்ஃபி எடுக்க முயன்றார்.

Continues below advertisement

அந்தச் சமயத்தில் ராம்குமார் தவறி பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்து மாயமானார். இதனைத் தொட‌ர்ந்து தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள், உள்ளூர் ம‌லையேற்ற‌க் குழுவின‌ர்  என சுமார் 30க்கும் மேற்பட்டோர் கடந்த 5 நாள்களாக ரெட்ராக் அடர்ந்த வனப்பகுதிக்குள் மாயமான ராம்குமாரை தீவிரமாக தேடிவந்த‌னர்.


அதுமட்டுமின்றி, கடந்த ஐந்து நாள்களாக மாயமான இளைஞரை ட்ரோன் கேமரா மூலம் தேடும் பணி நடைபெற்றுவ‌ந்த‌து. இந்நிலையில் நேற்று மாலை  ரெட்ராக் செங்குத்தான மலைச்சரிவு பள்ளத்தாக்கு பகுதியில் ட்ரோன் கேமரா  1400 அடி தூரம்வரை தாழ்வாக‌ பறக்க வைக்கப்பட்டது.

அப்போது மாயமான ராம்குமார் பள்ளத்தாக்கில் விழுந்த சமயத்தில் அணிந்திருந்த அவரது சட்டை மட்டும்  கண்டறியப்பட்டது. இதனால் ராம்குமாரின் உடல் அந்தப் பகுதியில்தான் இருக்க வேண்டுமென்பது உறுதியானது.

அச்சத்தில் ரவுடிகள் அடுத்தடுத்து சரண்டராகும் முக்கிய கைகள்..! ஸ்ரீதரின் கூட்டாளி சரண்டர்..!

அதனைத் தொடர்ந்து இளைஞ‌ரின் ச‌ட்டை க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்ட‌ 1400 அடி ப‌ள்ள‌த்தாக்கின் சுற்றுவ‌ட்டார‌ பகுதியில் தேடும் பணி மீட்புக்குழுவின‌ரால் முடுக்கிவிடப்பட்டது.

அதன்படி, த‌ற்போது மாய‌மான‌ இளைஞ‌ரின் உட‌ல் அழுகிய‌ நிலையில் 1500 அடி ப‌ள்ள‌த்தாக்கு ப‌குதியில் மீட்புக்குழுவின‌ரால் த‌ற்போது க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டுள்ள‌து. ச‌ட‌ல‌த்தினை மீட்டு வ‌ட்ட‌க்கானல் ப‌குதிக்கு கொண்டு வ‌ரும் ப‌ணியில் மீட்புக்குழுவின‌ர் ஈடுப‌ட்டுள்ள‌ன‌ர். செல்ஃபி மோகத்தால் இளைஞர் உயிரை விட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட வார்டு... வாகனம் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற திமுக வேட்பாளர் மனைவி... நொந்தவாசியான வந்தவாசி!

Local Body Election: ‛படிவம் வருவதற்குள் தேர்தல் வந்திடுச்சு...’ நாங்க போட்டி போட டைம் கொடுக்கல... சிவசேனா ஃபீலிங்!

Local body election |உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மறுத்த சிபிஎம் வேட்பாளர் - போட்டி வேட்பாளரை களம் இறக்கிய திமுக

Continues below advertisement