மூணாரில் காட்டுயானை ஒன்று பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தென்னக்கத்தின் காஷ்மீர் என்று அழைக்கப்படுவது கேரள மாநிலத்தில் உள்ள மூணார் சுற்றுலாதலம். இயற்கை எழில் கொஞ்சும் இடமாக மூணார் விளங்கி வருகின்றது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மூணார் சுற்றுலா தலம் என்பது வனப்பகுதி நிறைந்த இடமாகும். காட்டுயானை, காட்டெருமை, மான், வரையாடு போன்றவை அடிக்கடி வனப்பகுதியிலிருந்து வெளியேறி உணவு தேடி பொது இடங்களுக்கு வந்து செல்வது வழக்கமாகும்.


Kanguva 2nd Look: "இதை எதிர்பார்க்கலல" கண்களில் கனல் தெறிக்கும் கங்குவா புது போஸ்டர் ரிலீஸ்!




மேலும், வனவிலங்குகளை காணும் பொதுமக்கள் புகைப்படம் எடுப்பதோடு அதற்கு சில சமயங்களில் தாங்கள் கொண்டுவரும் உணவு மற்றும் திண்பன்டங்களை வழங்குவர். இதனிடையே அவ்வாறு உணவு தேடி வந்த காட்டுயானை ஒன்று மூணார் அருகே அமைக்கப்பட்டுள்ள பொது குப்பை கிடங்கில் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.


CM MK Stalin: "தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது" ஆளுநருக்கு பதிலடி தந்த முதலமைச்சர்!




இச்சம்பவத்திற்க்கு பொதுமக்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே இவ்வாறு பிளாஸ்டிக் கழிவுகளை உணவாக எடுத்துக்கொள்வதால் காட்டுயானை உட்பட வனவிலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க வேண்டிய வனத்துறையினர் அலட்சியாக செயல்படாமல் உடனடியாக இதனை தடுக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.