ஈஷா மையத்திற்கு சென்ற பெண் தற்கொலை குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும், காப்புகாடுகளை ஆக்கிரமித்துள்ள ஈஷாவிற்கு மத்திய அரசு இவ்வளவு சலுகை வழங்குவது ஏன் ? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி் எழுப்பியுள்ளார்.


தமிழ்நாட்டில் இத்தனை வாக்காளர்களா..? இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..! முழு விபரம்


மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசிய போது, ஆன்லைன் விளையாட்டு தொடர்பான மசோதாவிற்கு ஆளுநர் கையெழுத்து இடாதது ஏன் அவசர சட்டத்திற்கு கையெழுத்திடும் ஆளுநர் இதில் தாமதிப்பது ஏன்? என காரணம் என தெரிவிக்க வேண்டும். ஆன்லைன் விளையாட்டால் நூற்றுக்கணக்கானோர் தற்கொலை செய்துள்ளனர். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆளுநர் கையெழுத்திடாத நிலையில் நடைபெற்றுள்ள 10 பேரின் தற்கொலைக்கு ஆளுநர் தான் காரணம்.




ஆன்லைன் விளையாட்டுக்கு எதிராக தமிழக அரசு 162ஐ பயன்படுத்தி சட்டத்தை கொண்டுவர வேண்டும். ஆன்லைன் நிறுவனங்கள் நாள்தோறும் 200 கோடி ரூபாய் சம்பாதிக்கின்றனர். பள்ளி, கல்லூரிகள் முன்பாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையால் வருங்கால தலைமுறை அழியும் நிலை உள்ளது. காவல்துறையினருக்கு தெரியாமல் கஞ்சா விற்பனை நடக்காது. போதை பொருட்கள் விற்பனை அரசு தடுக்க வேண்டும். காப்புகாடுகளை ஆக்கிரமித்துள்ள ஈஷா மையத்திற்கு மத்திய அரசு ஏன்  இவ்வளவு சலுகை வழங்குகிறது என தெரியவில்லை. அவர்களுக்காவே மத்திய அரசு சட்ட திருத்தம் செய்கின்றனர். காட்டை ஆக்கிரமித்துள்ள ஈஷா மையத்திற்கு கல்விக்காக சட்டதிருத்தம் செய்துள்ளோம் என கூறுவது ஏன்?”  என கேள்வி எழுப்பினார்.


Governor RN Ravi: ஆளுநரை தகுதி நீக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்... பின்னணி என்ன?




மேலும், “காடுகளை ஆக்கிரமித்த ஈஷாவிற்கு சட்டதிருத்தம் அளித்துள்ளனர். சட்டம் அனைவருக்கு சமம் தான். ஈஷா மையத்திற்கு சென்ற பெண் தற்கொலை குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். காவிரியை காப்போம் என ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை வசூலித்துள்ளனர். இது மக்களின் பணம் ஆனால் இதுவரை எத்தனை மரங்களை நட்டுவைத்துள்ளனர். ஈஷா தொடர்பான விசயங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.


HBD Kanimozhi:“எழுத்தாளர், மக்கள் சேவகர், சகோதரி கனிமொழி” - பிறந்தநாள் வாழ்த்தில் புகழ்ந்த அண்ணாமலை!


திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை நிறைவேற்றவில்லை. ஒரு வாரத்தில் நீட் ரத்து, மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கீடு, பழைய பென்சன் திட்டம் போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை, அதிகளவு வாக்குறுதிகளை அளித்துவிட்டு வெற்றி பெற்ற திமுக தற்போது வாக்குறுதிகளில் பின் வாங்குகிறது” என்றார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண