ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிப்பதாக கூறி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தகுதி நீக்கம் செய்ய கோரி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனுவானது விசாரணைக்கு உகந்ததல்ல என நீதிமன்றம் தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்தது.


வழக்கு:


ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாக குழு தலைவராக உள்ள ஆளுநர் ரவி, ஆதாயம் தரும் பதவி வகிப்பதாகவும், எந்த தகுதியடிப்படையில் ஆளுநர் பதவியில் நீடிக்கிறார் என விளக்கம் அளிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.


மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிப்பதாக கூறி, தகுதி நீக்கம் செய்ய கோரி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான இவ்வழக்கானது, பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா அமர்வு விசாரணை செய்தது.




இவ்வழக்கானது, விசாரணைக்கு ஏற்றதல்ல என பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா அமர்வு தெரிவித்து ரத்து செய்தது.