Railway: மதுரை வழியாக திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை !
விடுமுறை கால கூட்ட நெரிசலை தவிர்க்க, தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு வாராந்திர சேவை சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
Continues below advertisement
சிறப்பு ரயில்
விடுமுறை கால கூட்ட நெரிசலை தவிர்க்க, தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு வாராந்திர சேவை சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (06030) ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 18 வரை வியாழக்கிழமைகளில் திருநெல்வேலியிலிருந்து இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று சேரும்.
Continues below advertisement
மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சேவை (06029) சிறப்பு ரயில் ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 19 வரை வெள்ளிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்திலிருந்து இரவு 07.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.45 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். இந்த ரயில்கள் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Minister Ponmudi: அரசை ஆலோசிக்காமலே பட்டமளிப்பு.. காமராஜர் பல்கலைக்கழக விழாவை புறக்கணிக்கிறோம் - கொதித்த அமைச்சர் பொன்முடி
திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் போத்தனூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 1 ரயில் மேலாளர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான பெட்டி இணைக்கப்படும்.” என ரயில்வே நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.