தென் மாவட்டங்களை மிக முக்கியமான விமான நிலையமாக பார்க்கப்படும் மதுரை விமான நிலையம், அவனியாபுரம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் மூலம் தினமும் 10க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கிறது. இந்த  மத்திய அரசின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கீழ் இந்த விமான நிலையம் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது வழக்கம்.


 





மதுரை விமான நிலையத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் இருக்கும் நிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆயுத கட்டிடத்தில் ஆய்வாளர் துருவ்குமார் ராய் இரவுபணி முடித்துவிட்டு 9 எம்.எம் தோட்டா வகை துப்பாக்கியை ஒப்படைக்கும் போது துப்பாக்கி தானாக எதிர்பாரதவிதமாக சுடத் தொடங்கியது.




 

இதனால் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மேலும் இந்த துப்பாக்கி சூடு போது யாருக்கும் எந்த ஒரு காயம் ஏற்படவில்லை. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் தவறுதலாக துப்பாக்கியை கையாண்ட காவலரை பணியிட நீக்கம் செய்து சென்னையில் உள்ள சி.ஆர்.பி.எஃப் டி.ஐ.ஜி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும் இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில்பாதுகாப்புப் படை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண