மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட சொக்கலிங்கபுரம் ஊராட்சியில் உள்ளது உதினிப்பட்டி கிராம். இங்குள்ள உதினிபட்டி பெரிய கண்மாய் சுமார் 120 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். கண்மாய்க்கு சுமார் 700 ஏக்கர் ஆயக்கட்டு பாசனம் உள்ளது. இந்த கண்மாய் கடந்த 2006 ஆம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. அப்போதைய காலகட்டத்தில் இப்பகுதியில் உள்ள சுமார் 700 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து விவசாயம் செழித்தது. அதனை தொடர்ந்து 14 ஆண்டுகள் போதிய நீர் வரத்து இல்லாமல் சீமைகருவேல மரங்கள் வளர்ந்து வறண்டு கிடந்தது.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் உதினிபட்டி பெரிய கண்மாய்க்கு கொட்டான்குளம் கால்வாய் வழி நீர் எடுத்து வருவதில் பல இடையூறுகள் இருந்து வந்த நிலையில் அந்தக் இடையூறுகளை உதினிபட்டி, மணல்மேடுபட்டி இளைஞர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் உடனும் இணைந்து அந்த இடையூறுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி துரிதமாக செயல்பட்டு உதினிபட்டி பெரிய கண்மாய்க்கு நேற்று அதன் முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது.
14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கண்மாய் மறுகால் பாய்ந்ததால் விவசாயிகள் பட்டாசு வெடித்து, மலர்தூவி கொண்டாடினர். தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு மதுரை மாவட்ட செயலாளர் அருண் தலைமையில் விவசாயிகள் சூடம் ஏற்றி வருண பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மறுகால்செல்லும் தண்ணீரில் மலர் தூவி வழி பாடு நடத்தினர். இதில் சொக்கலிங்கபுரம் ஊராட்சி 1வது வார்டு உறுப்பினர் வினோத் குமார், ஆயக் கட்டு பாசன விவசாய பிரதிநிதிகள் பாஸ்கரன், ராமச்சந்திரன், செல்வம், மலைச்சாமி, மற்றும் மீரான் சிக்கந்தர், ராஜா, முத்து தல, மற்றும் ஆயக் கட்டு பாசனகாரர்கள், விவசாயிகள், பெண்கள் கலந்தும் கொண்டனர்.
இது குறித்து விவசாயி அருண் தெரிவிக்கையில், மதுரை மாவட்டத்தில் மேலூருக்கு அடுத்தபடியாக உள்ள கருங்காலக்குடி, கொட்டாம்பட்டி பகுதிகள் கடைமடை பகுதிகளாக உள்ளது. இங்கு பல இடங்களில் வறட்சி மட்டும் தான் எஞ்சி உள்ளது. பல இடங்களில் ஊற்று நீரை தற்போதும் பயன்படுத்தும் சூழல் நிலவுகிறது. இந்த சூழலில் 14 ஆண்டுகள் போதிய நீர் வரத்து இல்லாமல் சீமைகருவேல மரங்கள் வளர்ந்து வறண்டு கிடந்தது. இந்த சூழலில் தற்போது பெய்த கனமழையால் எங்கள் கிராம பகுதிக்கு தண்ணீர் வந்துள்ளது. இதனால் எங்கள் பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்” என்றார்.